Breaking News

சுப்பிரமணியப் பாரதியார் விழி மூடிய நாள் இன்றாகும்

1882-ம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் திகதி எட்டயபுரம் எனுமிடத்தில் சின்னசாமி ஐயருக்கும் இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக அவதரித்தவரே பாரதியார். சிறுவயதில் 11-ம் வயதில் கல்வி பயி ன்று கொண்டிருக்கும்பொழுது கவி எழுதும் ஆற்றலை வெளிக்கொண ர்ந்தவர். கவிஞர், எழுத்தாளர், பத்திரி கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிணா மங்கள் கொண்ட மகாகவி பாரதி இன்று விழி மூடிய நாளாகும். இவருடைய இயற்பெயர் சுப்பிரமணியன்.  தமிழின் கவிதை, உரை நடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற கவிக்குயில். நவீன தமிழ் கவிதைக்கு நிகரற்ற தம் எழுத்துக்க ளின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலைத் தீயை மூட்டியவா் என வாழ்த்தியோர் பலர்.

இந்திய வரலாற்றில் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தபோது தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் தொடர்பாக கவிதைகளும், கட்டுரைகளும் பேனா முனையினால் தொடுத்தவர்.   

தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமைச் சித்தி உடையவர். பிற மொழி இலக்கியங்களை மொழிபெயர்க்கவும் வைத்தவர். இவருடைய கவிதை ஆற்றலினைப் பாராட்டி பாரதி என்ற பட்ட த்தை எட்டப்ப நாயக்கர் மன்னர் வழங்கியதினால் அன்றிலிருந்து பாரதி என அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்டவரும் இவரே.