30 வருட நினைவில் திலீபனை நினைவுகூர்வதில் பெருமிதம் - சம்மந்தன்
தமிழ் மக்களின் நெஞ்சங்களில் விடு தலைத் தீயை ஏற்றிச் சென்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் தியாக த்துக்கு பரிகாரம் கிடைக்கவில்லை யெனவும், திலீபனின் தியாகத்துக்கா ன பரிகாரத்தை நிலைநாட்டிடவே தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பு அயராது பா டுபடுவதாக தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் அம்பாறையில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபனுக்கு அஞ்சலி மேற்கொண்ட பின் உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ‘தியாகங்கள் அளப்பெரியவை அந்த வகையில், திலீபனின் தியாகம் உன்னதமானது.
தமிழர் தாயகத்தில் இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்கெ திராக 12 நாட்கள் உணவு, நீர் இன்றி உண்ணாநோன்பு போராட்டத்தில் ஆகுதி யான தியாகி லெப்.கேணல் திலீபனை 30 வருடங்களின் பின்னர் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கலந்துரையாடலில் நினைவுகூர்வதில் பெரு மிதம் கொள்கின்றோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.