கூட்டமைப்பை விமர்சிக்க நிரூபராதிகள் அல்ல புதிய அரசியல்வாதிகள் விசனம் - மாவை

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டி யையும் வடகிழக்கு இணைப்பையும் கைவிட்டதாக மண்ணுக்குப் புதியவ ர்கள், அரசியலுக்கு புதியவர்கள் விம ர்சனம் செய்கின்றார்கள் என தமிழ்தே சிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா கண்டனம் தெரிவித்து ள்ளார்.

கோப்பாய் கோமான் அமரர் கு.வன்னியசிங்கத்தின் 58 ஆவது நினைவு தினம் நேற்று மாலை கோப்பாயில் நடைபெற்றபோது அரசியலுக்குப் புதியவர்கள் கூட்டமைப்பை விமர்சிக்க தகுதியற்றவர்கள் என சீறும் மாவை இந் நிகழ்வில் கருத்து வெளியிட்டபோது சீறும் பாம்பாக மாறியுள்ளார்.


முஸ்லீம் மக்கள் பல சந்தர்ப்ப ங்களில் பல இணக்கப்பாட்டுக்கு இண க்கியதாகவும் வடக்கு கிழக்கு இணை ப்பு தொடர்பாக முஸ்லீம் மக்களுடன் கலந்துரைத்துள்ளதாகவும் தெரியப்ப டுத்தியுள்ளார். அரசியலுக்கு புதியவ ர்கள் கூட்டமைப்பை விமர்சிக்க தகுதி யற்றவர்கள், சீறும் மாவை அத்துடன் முஸ்லீம் மக்களை ஓரளவுக்கேனும் அதிருப்திபடுத்தி முஸ்லீம் மக்களின் அரசியல் அபிலாஷைகளை உள்வாங்கி வடகிழக்கை தமிழ்பேசும் மக்களின் தாயகமாக மாற்றியமைக்கலாமென மாவை சேனாதி ராஜா குறிப்பிட்டுள்ளார்.

இந் நிகழ்வில் வடமாகாணசபை சபைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் மாகாணசபை உறுப்பினர் ஆ.பரஞ்சோதி, இ.ஆனோல்ட், எஸ்.சிவயோகம் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்துள்ளனர்.