Breaking News

லெப்.கேணல் திலீபனின் 30ஆவது நினைவேந்தல் தாயகத்தில் எழுச்சியுடன் (காணொலி)

இந்திய வல்லாதிக்கத்திற்கு எதிராக நல்லூரின் வீதியில் அண்ணன் திலீ பன் அகிம்சைப் போரில் பன்னிரு நா ட்கள் உண்ணா நோன்பினைத் தொடு த்த தியாகச் செம்மல் லெப். கேணல் திலீபனின் 30வது  நினைவு நிகழ்வுகள் தமிழர் தாயகத்தில் உணர்வெழுச்சியு டன் அனுட்டிக்கப்பட்டுள்ளது. 1987ஆம் ஆண்டு நல்லூரின் வீதியில் ஐந்து அம்சக் கோரிக்கைகளுடன்  திலீபன் உண்ணா நோன்பை ஆரம்பித்து அவரு டைய கோரிக்கைகள் நிறைவெய்த இரங்கவில்லை இந்தியா அண்ணன் தளராது தொடுத்த அகிம்சை வழியில் பன்னிரண்டு நாட்கள் முடிவில் ஆகுதி யானார்.

இந்நாளில் தியாகியின் நினைவேந்தல் நிகழ்ச்சி நல்லூரில் அவருடைய நினைவுத் தூபி அமைந்திருந்த இடத்தில் உணர்வெழுச்சியுடன் மக்களால் அனுட்டிக்கப்பட்டுள்ளது.


மேலும் யாழ்ப்பாணம் மட்டுவில் பிள்ளையார் ஆலயத்திலிருந்து மு ன்னாள் போராளி ஒருவர் தூக்குக்கா வடி எடுத்து நல்லூரில் திலீபனின் நினைவேந்தல் தூபியை தூக்குக்கா வடியாய் வலம் வந்து அஞ்சலித்தார் என்பதுடன் அரசியல் பிரமுகர்கள் மக்கள் எனப் பெருமளவானவர்கள் திரண்டு தியாதீபம் திலீபனின் நினைவு நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.