ஆரவ்வை காதலிக்கவில்லையென ஓவியா மக்கள் முன் ...!
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் நடிகை ஓவியா தனக்கென மக்கள் மனதில் மிக பெரிய இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் சரவணா ஸ்டோர்ஸ் புதிய கடை திறப்பு விழா வைபவம் இடம்பெற்றது.
அக் கடையை ஓவியா ஆரம்பித்து வைத்தவேளை அவரை பார்க்கவென மக்கள் அணி திரள் திரளாக குவிந்து கடை திறக்கப்பட்ட பின் மக்களிடம் பேசுகையில் ‘உங்கள் ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி கூற நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன். அத்துடன் கண்டிப்பாக பிக்பாஸ் 100வது நாளுக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் வருவேன்’ என்று கூற, ரசிகர்கள் சந்தோஷத்தில் மிதத்தனர்.
அதைத்தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் ஓவியாவிற்கு பிடித்தவர் அனுயா என்று கூறியபோது மேலும் தற்போது தான் ஆரவ்வை காதலிக்கவில்லையெனத் தெரியப்படுத்தி அங்கு நடைபெற்ற அவ் வீடியோவை உங்களுக்காக கீழ் காண்பித்துள்ளோம்.