இலங்கை மக்கள் மீதான களங்கத்தை முற்றுமுழுதாக நீக்கியுள்ளதாக ஜனாதிபதி....!
சர்வதேச நாடுகள் மத்தியில் இல ங்கை மக்கள் மீதான கலங்கரையை முழுமையாக நிவர்த்தி செய்துள்ள தாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் மற்றும் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தலை வர்களைச் சந்தித்து எமது நாட்டின் நல்லிணக்கம் சகவாழ்வு மற்றும் ஐக்கியம் தொடர்பில் தெளிவுபடுத்தி யுள்ளேன். எமது நாட்டின் அபிவிருத்தி தொடர்பிலான எனது கோரிக்கை உலக தலைவர்களால் ஏகமனதுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். நாட்டை துரித அபிவிருத்தி செய்ய வேண்டுமானால் ஸ்திரமான அரசியல் சூழல் மற்றும் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புத் தேவையெனத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய எமது பாராளுமன்றத்திலும் 2 - 3 அதிகப் பெரும்பான்மை அரசி யல் பலமும் எமக்கிருப்பதுடன், சர்வதேச நாடுகளின் பூரண ஒத்துழைப்புக்களும், ஆதரவும் எமது நாட்டிற்கு கிடைக்கின்றன. சர்வதேச நாடுகளில் எமது நாட்டைப் பற்றியிருந்த களங்கத்தை, நான் முற்றுமுழுதாக நீக்கியுள்ளேன்.
ஐ.நா. செயலாளர், மனித உரிமை ஆணையாளர் உள்ளிட்டு சர்வதேச நாடுகளின் முக்கிய தலைவர்கள் பலரிடமும் நான் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு, நாட்டில் செயற்பட்டு க்கொண்டிருக்கும் நல்லிணக்கம், சகவாழ்வு, ஐக்கியம் தொடர்பான விடயங்களை விரிவாக எடுத்துரைத்து ள்ளேன்.
எனக்கு கிடைத்திருந்த வாய்ப்புக்களை சிறப்பாகப் பயன்படுத்தி விட்டேன். அத்துடன் எமது நாட்டின் மேம்பாடுகளை கவனத்தில் எடுத்து உதவிகளை நல்குமாறும் உலகத் தலவைர்களிடம் என்னால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
எமது நாட்டின் அபிவிருத்தியை வேகமாகச் செயற்படுத்துவதற்கு எவ்வித தடையும் தற்போது இல்லை. எமது நாட்டில் வரட்சி, வௌ்ளம் போன்ற இயற்கை சீற்றத்தினால் எமது மக்கள் சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்துள்ளனர்.
இதனை கருத்திற்கொண்டும், உணவு உற்பத்தியை அதிகரிக்கும் முகமாகவும் எதிர்வரும் 6ந் திகதி முதல் 11ந் திகதி வரைக்குமான வாரத்தை உணவு உற்பத்தி வாரமாக பிரகடனப்படுத்தவுள்ளேன்.
ஆரம்ப நிகழ்வு மாத்தளைப் பகுதியில் தம்புள்ளை பகுதியில் இடம்பெறவுள்ளது.
எமது நாட்டு மக்களின் நீண்டகால வரலாற்றினைப் பின்னோக்கினால் அது ஒரு போராட்ட வரலாற்றுக்களை முன்னிலைப்படுத்தியதாகவே காணப்ப ட்டிருந்தது.
காலணித்துவ ஆட்சியாளர்கள், ஆங்கிலேயர் ஆட்சி, 30 வருடங்களுக்கு மே லான கொடூர யுத்தம், வறுமை, வரட்சி, வௌ்ளம் போன்ற இயற்கை சீற்றம் ஆகியவற்றைத் தெரிவித்துக்கொள்ளலாம்.
எமது மக்கள் போராட்டங்களை மேற்கொண்டே வெற்றி பெற்றுள்ளனர்.
இனி மேல், இந்நாட்டில் யுத்தம் ஏற்பட வாய்ப்பே இல்லை. இந்நாட்டில் வாழும் அனைத்து இனங்களைக் கொண்ட மக்களும் நல்லிணக்கம், சகவாழ்வு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தியே செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுகின்றனர். இதனால் சமூகங்களுக்கிடையில், இனங்களுக்கிடையில், அரசியல் கட்சிகளுக்கிடையில் ஐக்கியம், சகவாழ்வு, நல்லிணக்கம் மேலோங்கி காணப்பட்டுக்கொண்டிருக்கின்ற து.
பதுளை மாவட்டம் என்பது கமத்தொழில், விவசாயம், பெருந்தோட்டத் தொழில் துறை முதலியவற்றை முன்னிலைப்படுத்தியுள்ளது.
இம் மாவட்டத்தில் வாழ்ந்து வரும் மக்களும் பெரும் வசதி படைத்தவர்களாக இல்லை.. மாவட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் மலிந்து காணப்படுகின்றன. இவற்றை தற்போதைய அரசு சீரமைத்துக் கொண்டிருக்கின்றது.
ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க பேசுகையில், மத்திய அரசுடன் இணைந்த வகையில், ஊவா மாகாண சபை முன்னெடுத்துச் செல்கின்றது.
இந் நாட்டிலேயே ஏனைய மாகாண சபைகளை விட ஆகக்கூடுதலான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செயற்படுத்துகின்ற வகையில், ஆகக்கூடுதலாக அரச நியமனங்களை வழங்கிய வகையிலும், எமது ஊவா மாகாண சபையே முன்னனிலை வகித்துள்ளது.
இக்குறுகிய காலத்திற்குள் இரண்டாயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கியுள்ளோம் என்றார்.
அமைச்சர் ஹரீன் பெர்ணன்டோ தமதுரையில், பதுளையில் அபிவிருத்தி குறித்து எதிர்நோக்கவோமானால்,
அமைச்சர் நிமால் சிரிபால டி சில்வாவினால் மட்டுமே நிறைவேறியுள்ளது.
ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, இராஜாங்க அமை ச்சர் டிலான் பெரேரா ஆகியோரும் பெரும் சேவைகளை செயற்படுத்தி யுள்ளனர்.
ஆனால், மேற்கூறப்பட்டவர்கள், நான் சார்ந்த கட்சியைச் சாராத விடயத்தி லும், அவர்கள் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளனர். என்னைப் பொறுத்தவரையில், மக்கள் என்னை விமர்சனம் தொடுத்த வண்ணமே உள்ளனர் என்பது குறிப்பி டத்தக்கது.