மகிந்த அரசு மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகம் - குற்றச்சாட்டு விஜயகலா
வடக்கு கிழக்கு மாகாணங்களில் முப்படைகள் ஊடாக போதைப்பொரு ள் விநியோகத்தை முன்னாள் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ச தலைமையி லான அரசாங்கம் செயற்படுத்திய தாக சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவ கார இராஜாங்க அமைச்சர் விஜயகல மகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளா ர். பாடசாலைகளுக்கு அண்மையி லுள்ள வர்த்தக நிலையங்களில் இரா ணுவத்தினரினால் போதைப்பொருட்கள் மாணவர்களுக்கு விற்பனைக்குட்படு த்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார இரா ஜாங்க அமைச்சினூடாக ஸ்ரீலங்காவிற்கான சீனா தூதரகத்தின் அனுசரணை யில் மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை கிராமத்திலுள்ள 6 பாடசாலை களில் தெரிவு செய்யப்பட 1000 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு மட்டக்களப்பு களுதாவளை மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.
ஸ்ரீலங்காவிற்கான சீனா தூதரகத்தின் பிரதி தூதுவர் சாங் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் கலந்துள்ளனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடக்கு கிழக்கு மாகாணங்களில் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்த நல்லாட்சி அரசாங்கம் நட வடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் தீர்வுக்காக போராடிய பலர் தற்போது மடிந்துள்ள நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தினூடாக தீர்க்கதரிசனமான தீர்வைப் பெற வேண்டு மெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.