தியாகி திலீபனிற்கு நல்லூரில் அனந்தி சசிதரன் அஞ்சலி !
விடுதலைப் போராட்டத்தில் அகி ம்சை போரில் ஈழத்தமிழ் மண்ணின் விடு தலைக்காக தன் உயிரை ஈகம் செய்த தியாக தீபம் லெப்ரினன் கேண ல் திலீபனின் 30 ஆம் ஆண்டு நினைவு நாள் யாழ்ப்பாணத்தில் உணர்வு பூர்வ மாக நினைவு கூரப்பட்டுள்ளது.
மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழ மலரட்டும் என உலகத் தமிழருக்கு அறைகூவிய திலீபன், 5 அம்சக் கோரிக்கைகளை முன்வை த்து நீராகாரம் எதுவுமின்றி தமிழ் மக்களது விடிவுக்காய் தன் உயிரை மெழுகாய் உருக்கி ஆகுதியானன்.
தியாகி திலீபனது 30 ஆவது ஆண்டு நினைவு அஞ்சலி யாழ்ப்பாணம் – நல்லூரில் இடம்பெற்றது.
வடமாகாண பெண்கள் விவகார அமைச்சர் அனந்தி சசிதரனின் ஏற்பாட்டில் தியாகி திலீபனது திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஊடகங்கள் மத்தி யில் கருத்து வழங்கிய வடமாகாண பெண்கள் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்,
தியாகதீபம் திலீபனது கோரி க்கைகள் நிறைவேறும் வரை தொட ர்ந்து போராட வேண்டுமென கோரி க்கை விடுத்ததுடன், இந் நினைவு நாளான தினத்தை பாடசாலை மாண வர்கள் மத்தியில் விரிவுபடுத்தாமலும் நினைவுகூர சந்தர்ப்பம் வழங்காமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.