வித்தியா தீர்ப்பில் விடுதலையானவரின் மனைவி - இரண்டரை வருடங்களின் பகீர்வு !
இன்றைய வித்தியா கொலை வழக்கு நீதிமன்றத் தீர்ப்பில் விடுதலையான இரண்டு நபர்களில், முதலாம் இலக்க சந்தேக நபர் எனக் குறிப்பிடப்பட்டிரு ந்த பூபாலசிங்கம் இந்திரகுமாரின் மனைவி இரண்டு வருடங்களாக எமது குடும்பம் பட்ட வேதனைக்கும் துன்பத்துக்கும் யார் உதவி செய்வார் எனக் கேள்வியை முன்வைத்துள்ளார். மேலும் தனது கணவர் கைதாகி சிறை யில் இருந்த காலத்தில் தனது குடும்பம் சொல்லெணாத் துன்பங்களை அனுப வித்ததாக மேலும் தெரிவித்துள்ள அவர்,
”மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின், எனது கணவரைக் கைதுசெய்ததுடன் எங்கள் வீடு மற்றும் உடமைகளை அழித்தார்கள்.
எங்களது உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலையில் யாழ்ப்பாண நகரில் உற வினர் வீட்டிலேயே தங்கியிருந்தோம். எமது வாழ்வாதாரத்தேவைகளுக்கு உதவுவதற்கு யாருமே முன்வரவில்லை.
இதனால் நானும் எனது பிள்ளைகளும் யாழ் கோட்டைப் பகுதியில்கச்சான் கடலை வியாபாரம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக எமது பிள்ளைகளுக்கு பொலிஸாரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்பொ ழுதும் யாழ் நீதிமன்றில் வழக்கு நடைபெற்றவண்ணமுள்ளது.
இரண்டரை வருடங்களின் பின்னர் எனது கணவர் இன்று விடுதலையாகி யுள்ளார். மகிழ்ச்சி நிறைந்த சம்பவமாக இருந்தாலும் இரண்டரை வருட ங்களும் எமது குடும்பம் சந்தித்த வேதனைகள் சொல்லில் அடங்காது எனத் தெரிவித்துள்ளார்.