Breaking News

புதிய அரசியல் யாப்பை கவனத்தில் கொள்ளுங்கள் : மனோகணேசன்

அரசியல் யாப்பில் உள்ளடக்கிய தகவ ல்களை ஏற்று அடுத்த கட்டத்திற்கு நகர யாவரும் தயாராக வேண்டுமென தேசிய சகவாழ்வு அரச கரும மொழி கள்அ மைச்சர் மனோகணேசன் குறி ப்பிட்டுள்ளார்.  இவ்வாறு செயற்படாத பட்சத்தில் தமிழ்த் தலைமைகள் கடந்த காலங்களில் செய்த தவறுளை தொடர்ந்தும் முன்னெடுக்க நேரிடு மெனக் குறிப்பிட்டுள்ளார்.  

யாழ். மாவட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் தேசிய சகவாழ்வு அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசனுக்கும் இடையில் கலந்து ரையாடல் நடைபெற்றுள்ளது. 

இக் கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று காலை 11 மணி யளவில்  நடைபெற்றது. சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதகுருக்கள் என பலர் கலந்த இந் நிகழ்விலே தேசிய சகவாழ்வு அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் இவ் விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். 

புதிய அரசியல் யாப்பின் ஊடாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணை க்கப்படு மத சார்பற்ற நாடாக ஸ்ரீலங்கா தெரிவிக்கப்பட வேண்டுமென்பது தனது தனிப்பட்ட விருப்பமென அமைச்சர் மனோகணேசன் குறிப்பிட்டுள்ளார். இருப்பிம் இவ் விடயங்கள் நடைமுறைக்குச் சாத்தியம் இல்லையென்பதை தான் உணர்ந்து கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பிரதமர் ரணில் விக்ரம சிங்கவிற்கு யாழ்ப்பாண மக்கள் வாக்குகளை வழங்கி ஜனாதிபதியாக தெரிவு செய்திருந்தால் சமஷ்டிக்கு சமனான உரிமையை வட,கிழக்கு தமிழ் மக்கள் பெற்றிருக்க முடியுமெனவும் தேசிய சகவாழ்வு அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் குறிப்பிட்டுள்ளார்.