போரில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுத்தூபி அமைப்பதாக - டக்ளஸ் தேவானந்தா
இறுதிப் போரில் உயிரிழந்த மக்களை நினைவு கொள்ளும் முகமாக நினைவுத்தூபி ஒன்றை அமைத்தலும் அதற்கான பொதுத்திகதி ஒன்றைக் வைத்தல் என்ற தனிநபர் பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்துள்ளார்.
இதற்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன பதிலளிக்கையில் போரில் உயிரிழ ந்தவர்கள் அனைவருக்குமாக பொது நினைவுத்தூபி ஒன்றினை அனுராத புரத்தில் அமைக்கலாமென தனது ஆலோசனையைத் தெரிவித்துள்ளார். போ ரில் உயிரிழந்தவர்களை நினைவு கூறப்பட வேண்டுமென்பதில் எவருக்கும் மாற்றீடு இல்லையெனவும் அப்படி உயிரிழந்தவர்களை நினைவு கூரும் பொறுப்பை அரசு ஏற்றுக்கொண்டால், பொது இடத்திலும் ஒரே திகதியிலும் இடம் பெறுவதை ஏற்றுக்கொள்ளலாம் எனவும் ருவான் விஜேவர்த்தன கருத்து தெரிவித்துள்ளார்.

இறுதிக் கட்டப் போரில் ஏற்பட்ட இழப்புக்கள் ஒப்பீட்டளவில் பெரிதும் தமிழர்களே என்பது குறிப்பிடத்தக்கது.
போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவது மட்டுமல்ல இறுதிக்கட்ட போரில் தமிழ் மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட படுகொலைகளையும், மனித உரிமை மீறல்களையும், நினைவுபடுத்தும் இத்தூபியினை அனுராதபுரத்தில் அமைப்பதை தமிழ் மக்கள் ஒரு போதும் ஏற்றகப் போவதில்லை.
இத்தூபி, தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இல்லை. அனுராதபுரத்தில் அமைக்கும் பொதுத்தூபியும், அரசு அறி விக்கும் பொதுத்திகதியும், தமிழ் மக்களைத் திருப்திப்படுத்துவதாக காண ப்படமாட்டாது.
மேலும் வடகிழக்கில் மாவீரர் துயிலும் இல்லங்கள் அழி க்கப்பட்ட நிலையிலேயே இன்றும் காணப்படுவது யாவரும் அறிந்த உண்மையே.