Breaking News

போர்க்குற்றங்கள் செய்தவரை பாதுகாப்பது நியாயமற்றது – பொன்சேகா!

போர்வீரர்கள் என்ற போர்வைக்குள் 

இராணுவப் போர் வீரர்கள்  தவறு செய்தால் பாதுகாக்க முற்படுவது நியாயமற்றதென்பதை ஒவ்வொரு அரசியல்வாதியும், அரசாங்கத்திலு ள்ள தலைவர்களும் தெரிந்து கொள்ள வேண்டுமென பீல்ட் மார்சலும், அரசி யல்வாதியுமான பொன்சேகா .கொழும்பில் நேற்று நடாத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கை யில், கடந்த காலங்களில், வல்லுறவுகள், கொலைகளைச் சம்ப வங்களை மேற்கொண்ட படைகள் தண்டிக்கப்பட்டது நாம் அனைவரும் அறிந்த விட யமே. மன்னம்பேரி, எம்பிலிப்பிட்டிய மாணவர் படுகொலைக்கு மரண தண்ட னைக்கு  தீர்ப்பு வழங்கப்பட்டது. 

மக்களுக்கு ஆதரவாக அரசாங்கம் செயற்பட்டு மக்களின் பக்கமே தலைவர்கள் தலை சாய்க்க வேண்டும். நான் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததால் தான், மக்கள் சுதந்திரமாக மூச்சு விடுகிறார்கள். 

ஊடகங்களும் தமது விருப்பப்படி தெரிவிக்கின்றன. போரை முடிவுக்கு கொண்டு வந்த நான் துரோகி என்றால், நாட்டின் சொத்துக்களை கொள்ளை யடித்தவர்கள், வெள்ளை வான்களில் கடத்தி மக்களைக் கொலை செய்த வர்கள், ஊழல்கள், மோசடிகள் செய்தவர்கள் எல்லாம் தேசப்பற்றாளர்களா? நான் இராணுவத்தில் இருந்த இரண்டு இலட்சம் படையினருக்கு உத்தரவு களை வழங்கினேன். 

இவ்வாறான இராணுவத்தில் இருந்த ஒருவர் தான் ஜெகத் ஜயசூரிய போர் நடவடிக்கைகளில் தொடர்புபட்டிருக்கவில்லை. ஒரு நபர் போர்வீரராக இரு க்கிறார் என்பதற்காக மக்களின் எதிர்பார்ப்புக்களை சிதைப்பதை ஏற்றுக்கொ ள்ளமுடியாதென்பதை. ஒவ்வொரு தலைவரும் புரிந்துகொள்ள வேண்டு மெனக் குறிப்பிட்டுள்ளார்.