Breaking News

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கான தீர்ப்பு நாளை !

மாணவி வித்தியா படுகொலை வழ க்கிற்கான தீர்ப்பு நீதிபதிகளால் நாளை ய தினம் பகிரங்கப்படுத்தப்படவுள்ள து. புங்குடுதீவு பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி பாடசாலைக்கென விரை ந்த மாணவி சிவலோகநாதன் வித்தியா கொடூர மாக படுகொலை செய்யப்பட்ட சம்ப வத்தில் 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின் 9 பேர் எதிரிகளாக காணப்பட்டுள்ளனர். முதலாம் எதிரியான பூ.இந்திரகுமார், 2 ஆம் எதிரியான பூ.ஜெயக்குமார், 3 ஆம் எதிரியான பூ.தவக்குமார், 4 ஆம் எதிரியான ம.சசிதரன், 5 ஆம் எதிரியான நி.சந்திரகாந்தன், 6 ஆம் எதிரியான சி.துசாந்தன், 7 ஆம் எதிரியான ப.குகநாதன், 8 ஆம் எதிரியான ஜெ.கோகிலன், 9 ஆம் எதிரியான ம.சசிகுமார் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்க ளத்தால் குற்றச்சாட்டு பத்திரம் யாழ் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு ள்ளது. 

வழக்கை நீதாய விளக்க நீதிமன்றில் (ட்ரயலட்பார்) விசாரணை செய்ய சட்ட மா அதிபர் திணைக்களம் பரிந்துரைத்ததையடுத்து, பிரதம நீதியரசரால் நீதாய விளக்க நீதிமன்றுக்கு மூன்று நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 


வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகி யோர் முன்னிலையில் நீதாய விளக்க மன்று யூன் மாதம் முதன்முறையாக யாழ் மேல் நீதிமன்றில் ஒன்று கூட்டப்பட்டுள்ளது.  

2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி புங்குடுதீவு பகுதியில் சிவ லோகநாதன் வித்தியா என்ற மாணவியை கற்பழிக்கும் நோக்கத்துக்காக கட த்துவதற்கு சதித்திட்டம் தீட்டியமை, பலாத்காரம் செய்யும் நோக்கத்து க்காக கடத்தியமை, கூட்டாக சேர்ந்து பலாத்காரம் செய்தமை, கூட்டாக சேர்ந்து பலாத்காரம் செய்து கொலை செய்தமை போன்ற பிரதான குற்றங்களும், மேற்குறித்த குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தமை போன்ற குற்றச்சா ட்டுக்கள் உள்ளிட்ட 41 குற்றச்சாட்டுக்கள் எதிரிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டு ள்ளது.

 9 ஆம், 4 ஆம் எதிரிகளுக்கு எதிரான பிராதான குற்றச்சாட்டாக, வித்தியாவை பலாத்காரம் செய்யும் நோக்கத்துக்காக கடத்துவதற்கு சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

 2 ஆம், 3 ஆம், 5 ஆம் 6 ஆம் எதிரிகளுக்கு எதிராக மேற்குறித்த நான்கு பிரதான குற்றச்சாட்டுக்களும் சாட்டப்பட்டிருந்தன. 7 ஆம் 8 ஆம் எதிரிகளுக்கு எதிராக மேற்குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு உடந்தையாக இருந்துள்ளதாக பிரதான குற்றச்சாட்டுக்களாக முன்வைக்கப்பட்டுள்ளது. 

மேற்குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு தாம் சுற்றவாளிகள் என 9 எதிரிகளும் மன்றுரை செய்திருந்தனர். அதனையடுத்து கடந்த யூன் மாதம் 28 ஆம் திகதி யில் இருந்து நீதாய விளக்க நீதிபதிகள் மூவர் முன்னிலையில் விளக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  

வழக்கு தொடுநர் தரப்பு எதிரிகள் தரப்பு சாட்சியங்கள் என அனைத்து சாட்சி யங்களின் விசாரணைகள் முடிவுறும் வரை ஒவ்வொரு முறையும் மன்றில் எதிரிகள் 9 பேரும் ஆயர்படுத்தப்பட்டுள்ளனர்.

அனைத்து விசாரணைகளும் கடந்த செப்ரம்பர் மாதம் 13 ஆம் திகதி முடிவுற்றி ருந்த நிலையில் நாளைய தினம் குறித்த வழக்கின் தீர்ப்பு பகிரங்கப்படுத்தப்ப டவுள்ளது.