Breaking News

20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு கருத்து தெரிவித்த - முதலமைச்சர்!

20ஆவது திருத்தச் சட்டம் சீரமைப்பு டன் காணப்பட்டால் அதனை மீள்பரி சோதனையின் மூலம்  நடவடிக்கை எடுக்கப்படுமென வடமாகாண முதல மைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறி ப்பிட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தில் 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவே ற்றப்பட்ட நிலையில் ஊடகங்கள்வி னாவியபோதே மேற்கண்டவாறு தெ ரியப்படுத்தியுள்ளார். 20வது திருத்த சட்டம் தொடர்பாக எந்தவித திருத்தங்களும் வரவில்லை. அதில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டால், முறையாக பரிசீலித்து சரியான முடிவுக்கு வருவோம். இதுவரையில் திருத்தங்கள் செய்யப்பட்டு எமக்கு அனுப்பிவைக்கப்படவி ல்லையெனவும் நிரூபித்துள்ளார். 

இந்நிலையில், கிழக்கு மாகாண சபையில் 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.  தொடர்பில் கிழக்கு முதலமைச்சர் தெரிவிக்கையில், அரசாங்கமானது சட்டமூலமொன்றைக் கொண்டுவரும்போது அதன் சாதக, பாதகங்களை ஆராய்ந்து பார்க்கவேண்டிய தேவை மக்கள் பிரதி நிதிகளாகிய எமக்குள்ளது. 

20ஆவது திருத்தச் சட்டத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட திருத்தங்கள் ஏற்றுக்கொள்ள ப்படுகின்றபோது அதனை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். இதனால் எமக்கு எந்தவிதப் பாதகமுமில்லையென குறிப்பிட்டுள்ளார்.