Breaking News

மனித உரிமை ஆணையாளரின் நிபந்தனைக்கு மறுப்பு - இலங்கை அரசு

போரினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு அர­சாங்கம் எனும் பெயரில் நாம் பூரண ஆத­ர­வு­க­ளையும் ஒத்துழைப்பு களையும் செயற்படுத்தி­ வருகின்றோ ம்.  தமிழ் மக்­களின் பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்­கா­கவே முழு மூச்­சுடன் செயலாற்றுகின்றோம்.  ஐக்­கிய நாடு கள் மனித உரி­மைகள் ஆணையா ளரின் அவ­ச­ரத்­திற்கு எம்மால் எத­னையும் செய்ய முடி­யாது. எமக்கு கால அவ­காசம் தர வேண்டுமென உயர் கல்வி மற்றும் நெடுஞ்­சாலை அபி­வி­ருத்தி அமைச்சர் ல­க்ஷமன் கிரி­யெல்ல தெரி­வித்தார். தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை நாம் புறக்கணிக்கவில்லை.  அனைத்துப் பிரச்­சி­னை­க­ளுக்கும் முழு­மை­யான தீர்­வை பெற்­றுக்­கொ­டுப்போமென தெரிவித்துள்ளார். 

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யாளர் செய்த் அல் ஹூசைன் நேற்று முன் தினம் இலங்கை அர­சாங்­கத்தின் மீது கடு­மை­யான குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­தி­ருந்தார். இது தொடர்பில் பேச்சைத் தொடுத்த போதே அமைச்சர் கேச­ரிக்கு மேற்­கண்­ட­வாறு தெரியப்படுத்தியுள்ளார். 

யுத்தத்தினால் வடக்கு கிழக்கில் மக்கள் பெருமளவிலானோர் பாதிப்படை ந்துள்ளனர். இவர்­க­ளுக்­கான உத­வி­களை அர­சாங்கம் தொடர்ந்து வழங்கி வரு கின்றது. 

நாங்கள் எதிலும் குறை வைக்­க­வில்லை. ஆனால் ஐக்­கிய நாடுகள் அமைப்பின் குற்­றச்­சாட்­டு­களை நியா­ய­மற்­ற­வை­யாகும். யுத்­த­திற்கு பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் வடக்கு கிழக்கு மக்­களின் வாழ்­வா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்பும் வகையில் அப்­ப­கு­தி­க­ளுக்கு அதி­க­ள­வி­லான உத­வி­களை வழங்கியுள்ளோம். 

பல்­வேறு வித­மான அபி­வி­ருத்தி திட்­டங்­களை செயற்படுத்தியுள்ளோம்.  பல ஏக்கர் காணி­களை இரா­ணு­வத்­தி­ன­ரிடம் இருந்து விடு­வித்­துள்ளோம். எனவே தமிழ் மக்­களின் பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்­கா­கவே முழு மூச்­சுடன் இன்று இயங்கி வருகின்றோம். 

உற்­சா­கத்­துடன் செய­லாற்றுவதோடு முழு­மை­யாக அனைத்து பிரச்­சி­னை­களையும் தீர்ப்­ப­தற்கு எமக்கு கால அவ­காசம் வேண்டும். வடக்கு பிரச்­சினை சாதா­ர­ண­மான விட­ய­மல்ல. அதில் பல்­வேறு பிரச்­சி­னைகள் காணப்படு கின்றன பொறு­மையுடன் தீர்க்கலாமெனத் தெரிவித்துள்ளார்.