Breaking News

பதவி விலகுங்கள்! ரவியிடம் மைத்திரி வேண்டுகோள்

வெளிவிவகார அமைச்சர் ரவி கரு ணாநாயக்கவை பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளதாக கொழும்பிலி ருந்து வெளியாகும் தேசிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்க ப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு மத்தி யில் ரவி கருணாநாயக்க, இனிமேலும் அமைச்சரவை அமைச்சுப் பதவியை தொடர்வது அரசாங்கத்துக்கும், ரவி கருணாநாயக்கவுக்கும் பாரிய பிரச்சி னையை ஏற்படுத்தும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும், அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இந்த நிலையில், பதவி விலகுவதே சிறந்த தீர்வு என அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் ஜனாதிபதி குறிப்பிட்டதாக அரச உயர்மட்ட வட்டா ரங்களை மேற்கோள்காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளன.