Breaking News

கிளிநொச்சியிலும் சற்றுமுன்னர் வாள்வெட்டு

கிளிநொச்சி மாவட்டம் இயக்கச்சிப் பகுதியில் சற்று முன்னர் வாள் வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ள தாக அங்கிருந்து கிடைக்கும் செய்தி கள் கூறுகின்றன. இயக்கச்சி சங்கத்தார் வயல் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற இந்த வாள்வெட்டுத் தாக்குதலில் மூன்று இளைஞர்கள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. காயமடைந்த மூன்று இளைஞர்களும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த் தர்க்கமே இந்த வாள்வெட்டுத் தாக்குதலுக்கு காரணம் என தெரிவிக்கப்ப ட்டுள்ளது. 

இதேவேளை யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டுச் சம்பவங்களினால் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து பலரைக் கைது செய்து வருகின்றமையும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கதாகும்.