ரெலோவின் விந்தனிற்கு பதிலாக குணசீலன் -முதலமைச்சர் அறிவிப்பு!
வடமாகாண முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன்
வடமாகாண சுகாதார அமைச்சராக வைத்திய கலாநிதி குணசீலனை பரிந்துரை த்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
வடமாகாண சபை சுகாதார அமை ச்சராக தன்னை நியமிக்குமாறு விந்தன் கனகரட்ணம் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனிடம் கோரி யுள்ளார். அத்துடன் ரெலோ அமைப்பும் விந்தனிற்கு வடமாகாண அமைச்சு பதவியை வழங்குமாறு குறிப்பிட்டிருந்தது.இந்நிலையில் பலருடன் கலந்துரையாடியதற்கு அமைய சுகாதார அமைச்சிற்கு பொருத்தமானவர் தொழில் ரீதியாக உரிய தகுதியுடையவர் என்ற அடிப்படையில் மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வைத்திய கலாநிதி குணசீலனை சுகாதார அமைச்சாராக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
வடமாகாண முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே .இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநித்துவப் படுத்தி மாகாண சபை உறுப்பினர் சிவநேசனுக்கு அமைச்சு பதவி ஒன்றை வழங்க திட்டமிட்டுள்ள தாகவும் முதலமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.
மேலும் வடமாகாண போக்குவரத்து அமைச்சு தனது அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அதனை உரியவாறு தொழிற் திறனோடு தன்னுடன் இணைந்து பணியாற்றுமாறும் முதலமைச்சர் விந்தன் கனகரட்ணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.