நீதி அமைச்சர் தலதா அத்துக்கோராள மீது ! குற்றச்சாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் - உதய கம்மன்பில
இலங்கையில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஆளும் கட்சியின் நாடா ளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கோரளவை நீதி அமைச்சராக நியமிக்க ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானத்தை கண்டிப்பதாக கூட்டு எதிர் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தற்போதை தலதா அத்துக்கோராள நீதி அமைச்சர் ! வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சராக கடமையா ற்றிய காலப்பகுதியில் நிதி மோசடி யில் ஈடுபட்டதாக விசாரணை ஆணைக்குழு கூட்டு எதிர்க்கட்சியி னர் புகார் அளித்திருப்பதாக எதிர்க்க ட்சியின் முக்கிய தலைவர்களில் ஒரு வரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தி யுள்ளார். இந்த நிலையில் தலதா அத்துக்கோராளவை நீதி அமைச்சராக நிய மித்ததன் மூலம் அப் பதவி மீது மக்கள் வைத்திருக்கம் நம்பிக்கை பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு அமையுமென நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம்சாட்டியுள்ளார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ள புதிய நீதி அமைச்சர் தலதா தனக்கு எதிராக எந்தவொரு ஊழல் விசாரணைகளும் ஆணைக்குழுவிடம் இல்லையென வாக்களித்துள்ளார்.
நீதி அமைச்சு தனது பணிகளை சிறந்த முறையில் முன்னெடுப்பதை முறிய டிப்பதற்காக எதிர் கட்சியினர் இவ்வாறான குற்றச்சாட்டைச் சுமத்துவதாகவும் வாக்களித்துள்ளார்.