நளினி – முருகன் வேலூர் சிறையில் சந்திப்பு
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறை தண்டனை அனு பவித்து வரும் தம்பதிகளான, நளினி மற்றும் முருகன் இன்று ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர்.
வேலூர் மகளிர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நளினியை அவரது கணவர் அங்கு சென்று சந்தித்து ள்ளார். சந்திப்பின்போது, முருகனி டம் அவரது மனைவி நளினி, ஜீவ சமாதி குறித்து கேட்டதாக இந்தியத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்டோர் 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நளினி தன்னுடைய மகள் ஹரித்ராவின் திருமண ஏற்பாடுகளை செய்ய 6 மாதம் பரோல் வழங்க வேண்டும் என, உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளதுடன், நளினியின் கணவர் முருகன் தான் சிறையிலேயே ஜீவசமாதி அடைய அனுமதி கேட்டும் விண்ணப்பித்திருந்தார்.
ஜீவசமாதியை எதிர்ப்பார்த்துள்ள முருகன், சிறையில் ஒருவேளை மட்டுமே உணவு எடுத்துக் கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இன்று காலை சுமார் அரை மணி நேரம் இடம்பெற்ற நளினி, முருகன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பில், மகள் ஹரித்ராவின் திருமண ஏற்பாடுகள் குறித்தும், முருகன் ஜீவசமாதி அடைவது குறித்தும் கலந்துரை யாடியுள்ளனர்.