தமிழரசுக் கட்சியை புறந்தள்ளி இடம்பெற்ற ரகசிய சந்திப்பு!

வவுனியா புகையிரத நிலையத்திற்கு அண்மையில் உள்ள விருந்தினர் விடுதியொன்றில், நேற்று (புதன்கிழமை) இரவு இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
வடக்கு மாகாண சபையின் சுழற்சி முறையிலான ஆசனம், இம்முறை தமிழரசுக் கட்சிக்கு வழங்கப்பட்ட நிலையில் ஏனைய கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இவ்வாறான நிலையில், இந்த ரகசிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அண்மை காலமாக கூட்டமைப்பில் உள்ள ஏனைய பங்காளி கட்சிகளுடன் தமிழரசு கட்சி சுமூகமான உறவை பேண மறுத்து வருகின்றது. அதனுடைய ஒரு வெளிப்பாடாகவே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதுடன், குறித்த விடயம் தொடர்பில் இந்த சந்திபின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தமிழரசு கட்சி எங்களை தனித்து விட்டு பயணிக்கின்றது. இந்நிலையில் எங்களை வலுப்படுத்திக்கொள்வதன் மூலம் தமிழரசு கட்சி இயல்பாகவே எங்களுடன் சேர்ந்து செயற்படும்.
எவ்வாறாயினும், இவ்வாறான கூட்டங்கள் ஏனைய மாவட்டங்களிலும் நடத்தப்படும் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளெட்) அமைப்பின் தலைவர் த.சித்தார்தன் மேலும் தெரிவித்தார்.