Breaking News

தமிழ் மக்களுக்கு சேவை செய்யவே அரசியலுக்கு வந்தேன்: சரத் பொன்சேகா

வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்க ப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே தான் அரசியலுக்குள் நுழைந்தாக பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்தார். 

மட்டக்களப்பு கல்லடியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஐக்கிய தேசியக் கட்சிக் காரியாலயத்தைத் திறந்து வைத்த பின்னர் அவர் உரையாற்றினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ”வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே நான் அரசியலுக்குள் நுழைந்தேன்.

யுத்தத்திற்குப் பின்னர் இப்பகுதி மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்புக்கிடைத்து ள்ளது. பெரும்பான்மையினருக்கான சகல உரிமைகளும் வசதி வாய்ப்புக்க ளும் நாட்டின் சிறுபான்மையினரான தமிழ் முஸ்லிம் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் உடன்பாடு கண்டதாகவே தற்போதைய அரசு எண்ணு கின்றது. 

 இந்த நாட்டில் இன மத பேதம் உருவாக வாய்ப்பளிக்க முடியாது. நாட்டின் அனைத்து மதத்தினருக்கும் அந்தஸ்து உண்டு இரண்டாயிரம் வருட கால இலங்கை வரலாற்றில் நாம் இணைந்து வாழ்ந்து வந்துள்ளோம். 

மீண்டும் அத்தகைய ஒரு நிலைமைக்கு இலங்கையர் என்ற உன்னத ஒரு இனம் என்ற சமுதாயத்தை உருவாக்க நாம் உழைக்க வேண்டியுள்ளது. மஹிந்த மீண்டும் நாட்டின் பெரும்பான்மை பௌத்த சிங்கள மக்களிடம் துரோகங்களை விதைத்து அதன் மூலம் ஆதரவைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்ற முயற்சி மேற்கொள்கின்றார். 

புதிய அரசியல் யாப்பிலே சிறப்பான ஏற்பாடுகள் மூலமாக இந்த நாட்டின் இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு ஒரே நாடு ஒரே இலங்கையர் நாம் என்ற அடிப்படையில் சகலரும் சகலதும் பெற்று வாழ ஏற்பாடுகள் இடம்பெறு கின்றன என்றார்.