வித்தியா படுகொலை : ஆர்ப்பாட்டம் கொழும்பில்
புங்குடுதீவு பாடசாலை மாணவி சி.வித்தியாவின் படுகொலை வழக்கை துரிதப்படுத்துமாறு வலி யுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்ட மொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டம் கொழும்பில் அமைந்து ள்ள ஐக்கிய நாடுகளின் தலைமைக் காரியாலயத்திற்கு முன்பாக இன்று காலை இடம்பெற்றது.
வித்தியாவின் படுகொலை வழக்கை துரிதப்படுத்துமாறு கோரியும் அர சாங்கத்திற்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்து இன்று கொழும்பில் இவ்வா ர்ப்பாட்டம் கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமைக் காரியாலயத்திற்கு முன்னால் இடம்பெற்றது.
ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டோர்
“இதுவா நல்லாட்சி நீதியரசர் இளஞ்செழியனை''
சுட முயன்றவரை்களை கைதுசெய்.
''விஜயகலாவை கைது செய் ”
போன்ற சுலோக அட்டைகளை ஏந்தி யவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.
ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் ஆர்ப்பாட்டக்கார்களால் மகஜர் ஒன்றும் ஐ.நா.அலுவலக அரிகாரிகளி டம் கையளிக்கப்பட்டது.
தேசிய மகளிர் வழக்கறிஞர்கள் முன்னணி குறித்த ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.