Breaking News

பெண்களை விமர்சிக்க கூடாது: நடிகர் விஜய் இரசிகர்களிடம் வேண்டுகோள்

பெண்களை இழிவாகவோ தரக்குறை வாகவோ விமர்சிக்க வேண்டாம் என நடிகர் விஜய் தனது இரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். 
 அண்மையில் இணையத்தள பெண் பத்திரிகையாளர் ஒருவர் விஜய் நடி ப்பில் வெளியாகிய ‘சுறா’ திரைப்ப டத்தினை ஹிந்தி திரைப்படம் ஒன்றுடன் ஒப்பிட்டு கருத்துக்களை வெளியிட்டார். இதனால் ஆத்திர மடைந்த விஜய் இரசிகர்கள் குறித்த பத்திரிகையாளரை மோசமான வார்த்தைகளால் சமூக வலைத்தளங்களில் திட்டித் தீர்த்தனர்.  இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் நடிகர் விஜய் தனது இரசிகர்களிடம் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளார். 

 “சமுதாயத்தில் பெண்களை மதிப்பவன் நான். யாருடைய திரைப்படத்தையும் யாரும் விமர்சிப்பதற்கு கருத்து சுதந்திரம் உண்டு. எக்காரணத்திற்காகவும் எந்த நேரத்திலும் பெண்களை இழிவாகவோ தரக்குறைவாகவோ விமர்சிக்க கூடாதென்பது  கருத்தாகும். 

அனைவரும் பெண்மையை போற்ற வேண்டும். யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பெண்கள் மீது தவறான கத்துக்களை வெளியிட வேண்டாமென்று கேட்டுக் கொள்கின்றேன்” என்றார் விஜய்.