Breaking News

சுமந்திரன் கொலை முயற்சி: ஆஸி. செல்கிறது விசாரணைக் குழு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய திட்டமிட்ட சந்தேகநபர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள, விசேட பொலிஸ் விசாரணை குழுவொன்று அவுஸ்ரேலியா செல்லவுள்ளது.

குறித்த சந்தேகநபரை நாடுகடத்த தேவையான ஆவணங்களுடன் அந்நாட்டிற்குச் செல்லும் விசாரணைக் குழு, அந்நாட்டு அரசாங்கத்திடம் இக் கோரிக்கையை முன்வைக்கவுள்ளது. இக் குழுவினர் இவ்வாரம் அவுஸ்ரே லியா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமந்திரனை கொலை செய்ய திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் ஐவர், ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான நெடியவன் எனப்படும் பேரின்பநாயகம் சிவபரன் உள்ளிட்ட குழுவினரே இதற்கான திட்டத்தை தீட்டியதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன் பிரகாரம், அவரை நாடு கடத்த நோர்வே அரசாங்கத்திடம் கோரிய போதும், நோர்வே அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது. எனினும், முறையான ரீதியில் அணுகும் பட்சத்தில் விசாரணைகளுக்கு தேவையான சகல ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக நோர்வே குறிப்பிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து முன்னெ டுக்கப்பட்ட விசாரணையில், அவுஸ்ரேலிய பிரஜையொருவர் இதன் பின்ன ணியில் செயற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவரை நாடு கடத்தும் முயற்சியில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.