Breaking News

தற்போதைய கடற்படைத் தளபதிக்கு ! முன்னாள் தளபதியால் நிபந்தனை !

ஸ்ரீலங்காவின் புதிய கடற்படை தள பதி ட்ரவிஸ் சின்னையாவிடம் முன்னாள் கடற்படைத் தளபதி நட்ட ஈடு கோரியுள்ளதாக கடற்படையின் முன்னாள் தளபதியான வசந்த கருணாகொட என்பவரே இவ்வாறு 500 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி தனது சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளார். தற்போதைய கட ற்படைத் தளபதியான ட்ரவிஸ் சின்னையா குற்ற விசாரணை பிரிவில் வழங்கியுள்ள வாக்குமூலம் ஒன்று தொடர்பிலேயே மேற்குறித்த நட்டஈடு கோரப்பட்டுள்ளது. 

ட்ரவிஸ் சின்னையா தனக்கும் தனது குடும்பத்தினருக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளதாக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கருணாகொடவினால் எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

திருகோணமலை சித்திரவதை முகாமில் சந்தேகநபர்கள் கொலை செய்ய ப்பட்டதாகவும், இது குறித்து அப்போதைய கடற்படை தளபதி வசந்த கரன்னா கொட அறிந்திருந்ததாகவும் தற்போதைய கடற்படை தளபதி ட்ரவிஸ் சின்னையா குற்றம் சுமத்தியுள்ளார். 

இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது எனக்  கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியமைக்காக 500 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்ட குறித்த நிபந்தனை கடிதம் கடந்த 13ஆம் திகதி குறிப்பிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் புதிய கடற்படைத் தளபதி உரிய பதில் வழங்கத் தவறும் பட்சத்தில் அவருக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக கடிதத்தில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.