Breaking News

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ! போராட்டம்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிக ளின் விடுதலையை வலியுறுத்தி வட மாகாண சபையில் இன்றைய தினம் கவன யீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
வடமாகாண சபையின் அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள மாகாணசபை கட்டடத்தில் நடைபெற்ற போது மாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததுடன் சபையில் போராட்டம் நடத்த அவைத்தலைவரிடம் கோரிக்கை விடுத்தார்.
அவைத்தலைவர் அனுமதியளித்ததை அடுத்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறு ப்பினர்கள் தமது இருக்கைகளில் இருந்து எழுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.