இந்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கை பயணமாகிறார் !

இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர் மட்டத்தினருடன் சிறப்பு சந்திப்புகளும் இடம்பெறவுள்ளன.
அதே போன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் ஆகியோரை கொழும்பில் சந்திக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் சந்திப்புகள் உறுதிப்படுத்தப்படவில்லை.
அதே போன்று மாநாட்டை மையப்படுத்தியதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜின் இலங்கை விஜயம் அமைந்துள்ளமையினால் அனைத்து சந்திப்புகளும் கொழும்பிலேயே இடம்பெறவுள்ளன.
வருட இறுதியில் கைச்சாத்திட உத்தேசிக்கப்பட்டுள்ள இலங்கை – இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார கூட்டு ஒப்பந்தம் மற்றும் மத்தல விமான நிலையத்தை கூட்டு முயற்சியுடன் அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து அரசாங்கத்தின் உயர் மட்டத்தினருடனான சந்திப்பின் போது இந்திய குழு கலந்துரையாடல்களை மேற்கொள்ள உள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் இந்த மாநாட்டில் கலந்துக்கொள்ள உள்ளனர். இந்திய மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாடு தொடர்ந்தும் இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.