திருகோணமலை மாவட்டத்தின் இன விகிதாசாரம் மாற்றமடைந்து காண ப்படுவதாகவும், இன விகிதாசார த்தைக் கணிப்பிடுவதாயின் நாட்டிலி ருந்து மக்கள் வெளியேறுவதற்கு முன்னரான காலப்பகுதியிலிருந்தே கணிப்பிடவேண்டுமென தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இன்று கலந்து கருத்துக் கூறிய போது மேற்குறிப்பிட்டவாறு மேலும் தெரிவிக்கையில்,
1983ஆம் ஆண்டு திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்களின் இன விகிதாசாரம் 42 வீதமும் முஸ்லிம்களின் 32வீதமும் சிங்களவர்கள் 26 வீதமுமாக கணிப்பிடப்பட்டது.
நாட்டில் எற்பட்ட போரின் காரணமாக திருகோணமலையில் இருந்து இந்தியாவுக்கு பலர் இடம்பெயர்ந்து முழுமையாக இன்னமும் வந்து சேர வில்லை. இது போல ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏனைய நாடுகளுக்கும் தஞ்சம் புகுந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இந்த நிலையிலே இன்று புள்ளி விபரம் மாறியுள்ளது. எனவே தற்போதைய நிலையை மட்டும் வைத்துக் கொண்டு புள்ளி விபரங்கள் தொடர்பாக கணிப்பி டக் கூடாதெனக் கூறியுள்ளார்.