வடக்கின் அமைச்சுக்கள் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் முதலமைச்சரிடம்!
வட.மாகாண சபையின் அமைச்சுப் பதவிகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு வழங்க ப்பட்டுள்ளது.
தமிழ்தேசியக் கூட்ட மைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் அங்க த்துவக் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பில் தீர்மா னம் எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் முதலமைச்சரின் இல்லத்தில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில் 3 முக்கிமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தன.
இவ்வாறான சந்திப்புக்கள் தொடரும் எனவும் புதிய அரசியலமைப்புத் தொடர்பாக விரைவில் சந்தித்துப் பேசுவதற்கும் தீர்மானிக்க ப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.