Breaking News

சிறையில் 7வது நாளாக முருகன் உண்ணாவிரதம் !

வேலூர்: சிறையில் 

இன்று ஏழாவது நாளாக முருகன் தனது உண்ணா விரதத்தை தொடர்ந்து வருகின்றார். முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்ட னை விதிக்கப்பட்ட முருகன், 28 ஆண்டுகளாக வேலூர் சிறையில் உள்ளார். 

தனக்கு விடுதலை கிடைக்காது என்பதால், சிறை யில், ஜீவ சமாதி அடைவதாக கூறி, கடந்த, 18 முதல் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வரும் முருகனி டம் விரதத்தை கைவிடும்படியும்,

உணவு சாப்பிடும்படி சிறை அதிகாரிகள் கூறியதை, முருகன் ஏற்க மறுத்து விட்டார். தொடர்ந்து மௌன விரதத்தை மேற்கொண்டு வருவதால் சிறை காவலர்கள் கண்காணித்து வருகின்றனர். 

 உடல் நிலை மிகவும் சோர்வாக காணப்படுவதால், நேற்று காலை முதல் இரவு, 7:00 மணி வரை, நான்கு முறை, சிறை டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.