Breaking News

காந்தள் அறிவுக்கூடம் கைவேலியில் திறப்பு(படங்கள்)

காந்தள் புலம்பெயர் இளையோர் அமைப்பின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ஈழத்தில் புதுக்குடியிருப்பு கைவேலி பிரதேசத்தில் குடும்பங்களின் பொருளாதாரப்பிரச்சனையால் கல்விகற்க இயலாத குடும்பத்தில் வசிக்கும் மாணவ,மாணவிகளை ஊக்கப்படுத்தும் முகமாக அவர்கள் இலவசமாக கல்வியினைக் கற்பதற்கு காந்தள் புலம்பெயர் இளையோர் அமைப்பினால் காந்தள் அறிவுக்கூடம் ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு 24.08.2017 இன்று நடைபெற்றது. நிகழ்வின்போது தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டியும் கற்றல் உபகரணங்களும் காந்தள் புலம்பெயர் இளையோர் அமைப்பின் உறுப்பினர் திரு.நிதர்சனால் வழங்கிவைக்கப்பட்டது.

கடந்த ஒருவருடமாக புலம்பெயர் தேசத்திலுள்ள இளைஞர்களின் தனிப்பட்ட கையளிப்புக்கள் மூலமாக பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவிவந்த காந்தள் அமைப்பு தனது ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு இந்த கல்விக்கூடத்தை ஆரம்பித்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் காந்தள் அறிவுக் கூடம் திறப்பு விழா நிகழ்வில் வட மாகண சபை உறுப்பினர்கள், பாரளுமன்ற உறுப்பினர்கள், பிரேதச சபை உறுப்பினர்கள் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.