கிளிநொச்சியில் பேரூந்து விபத்து: ஆறுபேர் காயம்.
கிளிநொச்சியில் தனியார் சொகுசு பேரூந்து விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட ஆறுபேர் படுகாய மடைந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பேரூந்தே இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3.00 மணியளவில் விபத்துக்குள்ளாகி யுள்ளது.
இச்சம்பவத்தில் விபத்திற்கு ள்ளான பேரூந்து, கடைத் தொகுதியையும், மின்சார கம்பங்களையும் உடைத்துக்கொண்டு கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தின் கட்டடத்தின் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விபத்தில் படுகாயமடைந்த ஆறு பேரும் கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்தானது அதிக வேகத்தினாலோ, அல்லது சாரதி தூங்கியதனாலோ இடம்பெற்றிருக்கலாம் எனச் சந்தேகிப்பதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளமையால் அப்பகுதியில் மின்சாரம் தடை ப்பட்டுள்ளதுடன், சேதமடைந்த மின் கம்பங்களினதும், மின்மாற்றியினதும் பெறுமதி 25 இலட்சத்திற்கும் அதிகமாகும் என அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.