Breaking News

இந்தியச் சினிமாவின் தாக்கத்தால் ஆவாக் குழு-றெஜினோல்ட் கூரே

தென்னிந்தியச் சினிமாவின் தாக்கத்தி னால் உருவாகியதே ஆவாக் குழு என வும் அக்குழுவுக்கு எந்தவித அரசியல் நோக்கமும் இல்லையென வடமா காண ஆளுநர் றெஜினோல்ட் கூரே குறிப்பிட்டுள்ளார். 

யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் ஆவாக் குழு தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பி ட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், வெளிநாடுகளிலிருந்து நிதி கிடைக்கும் இளைஞ ர்கள் சிலர் இந்தியாவின் சினிமாவினால் தாக்கமடைந்தே இவ்வாறு நடந்து கொண்டதையடுத்து தமிழ்மக்கள் தமது உரிமைகளுக்காக போராடி க்கொண்டிருக்கும்வேளையில், அதற்குச் சமாந்தரமாக இக்குழு வன்முறை யில் ஈடுபட்டு வருவதே உண்மைச் சம்பவம் எனக் குறிப்பிட்டுள்ளார்.  

வெளிநாட்டிலுள்ள சில அமைப்புக்கள் வடமாகாணத்தில் அமைதியற்ற சூழ லையே விரும்புகின்றனர். இவ்வமைப்புக்களால் இக்குழுவுக்கு நிதியுதவி வழங்கப்படுகின்றதா என்பதை பாதுகாப்புத் தரப்பினர்  உறுதிப்படுத்த வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளார்.