விஜேதாஸ தொடர்பில் விரைவில் முடிவெடுப்பேன்
பிரதமர் அறிவிப்பு; பதவி நீக்கம் தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் முடிவெடுத்ததாகவும் தகவல்
விஜேதாஸ ராஜபக்ஷ பிரச்சினைகள் குறித்து விளக்கமளிப்பதற்கு அளித்த கால அவகாசம் நிறைவடைந்து விட்டது. ஆகவே இனிமேல் தீர்மா னம் எடுக்கும் தருணம் வந்துள்ளது. இதன்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு
நடத்தி விரை வில் விஜேதாஸ ராஜபக்ஷ குறித்து தீர்மானத்தை அறிவிப்பேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் அறி வித்துள்ளார். இதனை அடுத்து நேற்று இரவு 9.30 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது கட்சியின் நிலைப்பாட்டை அறிவித்ததை அடுத்து விஜயதாஸ ராஜபக்ஸவை பதவியில் நீக்குவதற்கு முடிவெடுக்கப்பட்டதாக தெரியவருகின்றன.
இது குறித்து அறிவிப்பு விரைவில் விடுக்கப்படும் என அரசாங்க மட்ட தக வல்கள் தெரிவிக்கின்றன
விஜயதாஸ ராஜபக்ஸ தொடர்பில் ஆராய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவினால் மலிக் சமரவிக்கிரம தலைமை யில் மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது.
எனினும் இந்த குழுவிற்கு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ எந்தவொரு விளக்கத்தை அளிக்க முன்வரவில்லை என பாராளுமன்ற குழு கூட்டத்தின் போது மலிக் சமரவிக்கிரம குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்தே பிரதமர் குறித்த அதிரடி அறிவிப்பை விடுத்துள்ளதாக தெரிகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று மாலை 6.30 அலரி மாளிகையில் கூடியது.
எனினும் இந்த குழு கூட்டத்தின் போது அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பங்கேற்கவில்லை என்பது குறிப்பிட்டாக வேண்டும்.
இந்த குழு கூட்டத்தின் போது விஜயதாஸ ராஜபக்ஷ விவகாரம் தொடர்பில் பரவலாக ஆரா யப்பட்டன.
இதன்போது செயற்குழு கூட்டத்தில் எதிர்ப்பு வெளியிட்ட அஜித் பீ பெரேரா, ரன்ஜன் ராமநாயக்க உள்ளிட்டோர் விஜயதாஸ ராஜபக்ஷவிற்கு பெரும் எதிர்ப்பு வெளியிட்டனர்.
இந்த விடயம் தொடர்பாக ஏற்கனவே கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது மலிக் சமரவிக்கிரம. மங்கள சமரவீர மற்றும் ரவிந்திர சமரவீர ஆகிய மூவரை கொண்ட குழு நியமி க்கப்பட்டது.
இந்த குழுவின் அறிக்கை எவ்வாறு அமையும் என்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் பெரும் எதிர்பார்ப்புகள் காணப்பட்டன.
இந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் ரணில் விக்கிரசிங்க குழுவிற்கு விஜயதாஸ ராஜபக்ஷ ஏதும் தெளிவுப்படுத்தல் செய்தாரா என கேட்டார். இதன்போது விஜயதாஸ ராஜபக்ஷ எமது குழுவிற்கு எந்தவொரு வாக்குமூலமும் வழங்கவில்லை என அமைச்சர் மலிக் சமரவிக்கிரம குறிப்பிட்டார்.
இதனையடுத்து விஜயதாஸ ராஜபக்ஷவிற்கு அளித்த கால அவகாசம் நிறைவடைந்து விட்டது. இனி இறுதி தீர்மானம் எடுக்க வேண்டியுள்ளது. ஆகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் தீர்மானம் எடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.
இதன்படி ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற குழு கூட்டம் நிறைவடைந்த பின்னர் ஜனாதிபதி செயலகத்திற்கு நேற்று இரவு 9.30 அளவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சென்றுள்ளார்.
இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்ச ருமான கபீர் ஹாஷிம், கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான மலிக் சமர விக்கிரம மற்றும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆகியோரும் சென்றுள்ளனர்.
நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிற்கு விவகாரம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி குழு கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் நேற்று .இரவு 9.30 மணியளவில் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவை சந்தித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் நிலைப்பாட்டை அறிவித்ததை அடுத்து விஜயதாஸ ராஜபக்ஸவை பதவியில் நீக்குவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரியவருகின்றன.
இது குறித்தான அறிவிப்பு பெரும்பாலும் இன்றைய தினம் வெளிவரும் சாத்தியம் உள்ளது.