நடத்துனரின் அசண்டையீனம் -பொதுமக்கள் முறைப்பாடு
பணத்துக்காக பயணிகள் மயக்கமுற்றும்
கண்டுகொள்ளாமல் கொலை செய்யும் நோக்குடன் ஓடும் புன்னாலைக்கட்டுவன் -யாழ் தனியார் பேருந்துகள். உண்மைச் சம்பவம்
இன்று மாலை நான்கு மணியளவில் யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்தது 60- 3463 என்ற இலக்கத்தை உடைய தனியார் பேருந்து இதில் அதிகளவு பயணிகள் இருந்ததால் திருநெல்வேலி சந்தியை தாண்டியதும் சன நெரிசல் அதிகரித்ததால் இளம்யுவதி பேருந்தில் மயங்கி விழுந்துள்ளார். இதனை பயணிகள் நடத்துனருக்கு தெரியப்படுத்தியும் அவர் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளதுடன் பயணிகளையும் திட்டியதோடு உங்களால் முடியாவிட்டால் பேருந்தில் பயணம் செய்யத்தேவையில்லை இறங்கலாம் என்று கடுந்தொனியில் பேசியுள்ளார். சிறிது நேரத்திற்கு பிறகு பயணிகளால் ஓடிக்கொண்டு இருந்த பேருந்தில் ஏனையவரிடம் தண்ணீர் வாங்கி தெளித்து மயக்கம் தெளிவடைய செய்து பாதுகாப்பாக அப்பெண் அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த விடயம் தொடர்பில் குறித்த தனியார் பேருந்து சங்கம் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விடயம் தொடர்பில் யாரும் முறைப்பாடு செய்ய முன்வர மாட்டார்கள் என்ற துணிவில் இருக்க வேண்டாம். இவ்வாறான தவறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ஒவ்வொரு நபரையும் மக்கள் கண்காணித்து வருகின்றனர் சந்தர்ப்பம் வரும்போது அவர்களுக்கு உரிய முறையில் தீர்ப்பு வழங்கப்படும்.
இவர்களை விட இதே போக்குவரத்து சேவையில் ஈடுபடும் ஏனைய தனியார் பேருந்து நடத்துனர்கள் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் உள்வாரி , வெளிவாரி மாணவிகளிடம் தவறாக நடக்க நடக்க முற்படுகிறார்கள். குறிப்பாக தொலைபேசி இலக்கத்தை தருவீர்களா என்று கேட்பது, தனது நண்பர்களுக்கு கூட்டி கொடுக்கும் வேலைகளை செய்வது, சில நாட்கள் பேருந்து கட்டணம் வாங்காமல் விட்டு வீட்டுக்கு வரவா என்று கேட்பது, இரண்டு பொருள்பட பெண் மாணவிகளுடன் பேசுவது, தங்களுடன் கதைக்க மறுக்கும் மாணவிகளை சீறி சினந்து பேசுதல், போதையில் நடத்துனர் வேலையில் ஈடுபடுதல் போன்ற விடயங்கள் அவதானிக்கப்பட்டு குறிப்பிட்ட நபர்கள் மற்றும் பேருந்து இலக்கம், அவர்களின் குரல் பதிவுகள் என்பன பெறப்பட்டுள்ளது. ஆகவே குறித்த தனியார் பேருந்து சங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ஒவ்வொரு நபரையும் குறித்த சேவையில் இருந்து நிறுத்துமாறு கோரி நிற்கிறோம். இவர்கள் மீது மக்கள் முறைப்பாடு செய்ய தயங்கும் பட்சத்தில் நாம் உரிய தீர்ப்பினை வழங்குவோம்.
இது மட்டுமன்றி ஏனைய போக்குவரத்து சேவையில் ஈடுபடும் ஏனைய தனியார் பேருந்து உரிமையாளர்கள்,ஓட்டுநர்கள்,நடத்துநர்கள் குறிப்பாக கொழும்பு செல்லும் தனியார் பேருந்துகள் பெண்பிள்ளைகளுக்கு முன் பக்கத்தில் ஆசனம் கொடுத்து அவர்களுடன் கதைத்து கொண்டுவந்து இறக்கும் நேரத்தில் தொலைபேசி இலக்கத்தை பெற்று தவறான நடவடிக்கைகளை அதாவது இரவு நேரங்களில் அவர்களுக்கு தொலைபேசி எடுத்து தொல்லை கொடுப்பதாகவும் அறிய முடிகிறது. அவர்கள் தொடர்பான விவரங்களையும் விரைவில் வெளிவிடுவோம்.