Breaking News

எது பயங்கரவாதம்?- சிறி­தரன்

யாழ்ப்­பா­ணத்தில் இடம்­பெற்று வரு­கின்ற குற்றச்
செயல்­க­ளுடன் முன்னாள் விடு­த­லைப்­பு­லி­களைத் தொடர்­பு­ ப­டுத்தி கருத்­துக்­களை எழுந்­த­மா­ன­மாக வெளி­யி­டு­வதை பார­தூ­ர­மான விட­ய­மா­கவே நோக்க வேண்­டி­யி­ருக்­கின்­றது.

ஏனெனில் புனர்­வாழ்வுப் பயிற்சி என்ற போர்­வையில் இரா­ணுவ தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்டு, இரா­ணுவ அர­சியல் ரீதி­யாக மூளை சலவை செய்­யப்­பட்ட ஒரு நிலையில் மன­மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி சமூ­கத்தில் இணைக்­கப்­பட்­டுள்ள முன்னாள் விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்கள், போருக்குப் பிந்­திய தமிழ் சமூ­கத்தில் தமக்­கென தகுந்த வாழ்க்­கை­யையும் வாழ்க்கை முறை­யையும் அமைத்துக் கொள்ள முடி­யாமல் தவிக்­கின்­றார்கள்.

யாழ்ப்­பா­ணத்தில் சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நாட்டி, பாது­காப்பைப் பலப்­ப­டுத்த பொலிஸாருடன் முப்­ப­டை­க­ளையும் பயன்­ப­டுத்­து­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள தீர்­மானம் சர்ச்­சைக்கு உள்­ளா­கி­யி­ருக்­கின்­றது.

இதனால், யுத்தம் முடி­வ­டைந்து எட்டு வரு­டங்கள் முடிந்­துள்ள நிலையில், யுத்த காலத்தைப் போன்று மீண்டும் யாழ்ப்­பா­ணத்தில் இரா­ணுவ பாது­காப்பு நிலைமை உரு­வா­கு­வ­தற்கு வழி­யேற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றதோ என்று பல­த­ரப்­புக்­க­ளிலும் இருந்து அச்சம் வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கின்­றது.

ஆனால், யாழ்ப்­பா­ணத்தில் ஏற்­பட்­டுள்ள குழப்­ப­க­ர­மான நிலை­மைக்கும், அங்கு குற்­றச்­செ­யல்கள் அதி­க­ரித்து, சட்டம் ஒழுங்கு சீர்­கு­லைந்­தி­ருப்­ப­தற்கும் முன்னாள் விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்­களே காரணம் என பொலிஸார் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர்.

இதன் கார­ண­மா­கவே, அங்கு பயங்­க­ர­வாதம் தலை­யெ­டுத்­தி­ருப்­ப­தாக பொலிஸ் தரப்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

யாழ்ப்­பா­ணத்தில் சட்­டமும் ஒழுங்கும் சீர்­கு­லைந்­தி­ருக்­கின்­றன. அங்கு பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இதனை மறுப்­ப­தற்­கில்லை. ஆனால் அங்கு பயங்­க­ர­வாதம் தலை­யெ­டுத்­தி­ருப்­ப­தாகக் கூறப்­ப­டு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்­பது இரா­ணுவ பாது­காப்பை எதிர்ப்­ப­வர்­களின் நிலைப்­பா­டாக உள்­ளது.

மனப்­பாங்கில் மாற்­ற­மில்லை

யாழ். மேல் நீதி­மன்ற நீதி­பதி இளஞ்­செ­ழியன் மீது நல்­லூரில் நடத்­தப்­பட்ட துப்பாக்கிப் பிர­யோகத் தாக்­குதல், கொக்­குவில் பகு­தியில் பொலிஸார் மீது நடத்­தப்­பட்ட வாள்­வெட்டு குழுவின் தாக்­குதல் ஆகிய இரண்டு சம்­ப­வங்­க­ளை­ய­டுத்து, யாழ்ப்­பா­ணத்தின் பாது­காப்பு நிலை­மை­களை நேரில் ஆராய்­வ­தற்­காக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­தர அங்கு விஜயம் செய்­தி­ருந்தார். யாழ்ப்­பா­ணத்தில் குற்றச் செயல்கள் அதி­க­ரித்­தி­ருக்­கின்ற பின்­ன­ணியில் முன்னாள் விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்கள் இருக்­கின்­றார்கள் என்­பதை அவர் அங்கு கோடிட்டு காட்­டி­யி­ருக்­கின்றார்.

யாழ் மேல் நீதி­மன்ற நீதி­பதி இளஞ்­செ­ழி­யனின் மெய்ப்­பா­து­கா­வ­லர்கள் மீது நடத்­தப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோ­கத்தில் பொலி­சாரின் கைத்­துப்­பாக்­கியைப் பறித்­தெ­டுத்து தாக்­குதல் நடத்­தி­யவர் முன்ளாள் விடு­த­லைப்­புலி உறுப்­பினர் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதே­போன்று கொக்­குவில் பகு­தியில் பொலிஸார் மீது வாள்­வெட்டு தாக்­குதல் நடத்­திய குழு­வுக்குத் தலைமை தாங்­கி­ய­வரும் முன்னாள் விடு­த­லைப்­புலி உறுப்­பினர் என்று பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­தர தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்­துள்ள போதிலும், சமூ­கத்தில் இருக்­கின்ற ஆயுதப் பயிற்சி பெற்­றுள்ள முன்னாள் விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்­களின், ஆயுதப் போராட்ட மனப்­பாங்கில் மாற்றம் ஏற்­பட்­டி­ருக்­க­வில்லை என்ற தொனியில் அவர் கருத்து வெளி­யிட்­டி­ருக்­கின்றார்.

அரச படை­க­ளுக்கு எதி­ரா­கவே விடு­த­லைப்­பு­லிகள் ஆயுதப் போராட்­டத்தை நடத்­தி­யி­ருந்­தார்கள். யுத்த காலத்தில் அரச படை­களும், விடு­த­லைப்­பு­லி­களும், தீவி­ர­மாக சண்­டையில் ஈடு­பட்­டி­ருந்­தனர். இரண்டு நாடு­க­ளுக்­கி­டையில் நடை­பெற்ற எதி­ரி­க­ளுக்­கி­டை­யி­லான மோச­மான பகை­யு­ணர்வு போன்­ற­தொரு போக்­கி­லேயே இந்த சண்­டைகள் அமைந்­தி­ருந்­தன. எனவே, யுத்தம் முடிந்­து­விட்ட போதிலும், முன்னாள் விடு­த­லைப்­பு­லி­க­ளிடம், அரச படை­க­ளுக்கு எதி­ராக யுத்தம் நடத்­திய மன­நிலை இன்னும் தொடர்­வ­தாக அவர் குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.

இத்­த­கைய மன­நி­லையும், இன்னும் கைப்­பற்­றப்­ப­டாமல் அர­சாங்­கத்­தினால்; அடை­யாளம் காணப்­பட்ட இடங்­க­ளிலும்,; இன்னும் அடை­யாளம் காணப்­ப­டாத இடங்­க­ளிலும் உள்ள பெருந்­தொ­கை­யான ஆயு­தங்­களும், குற்றச் செயல்­களில் ஈடு­ப­டவும், பொலி­ஸா­ருக்கு எதி­ரான தாக்­கு­தல்­களை நடத்­தவும், முன்னாள் விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்­களைத் தூண்­டி­யி­ருப்­ப­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார். மொத்­தத்தில் யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்­துள்ள போதிலும், பயங்­க­ர­வாதம் இன்னும் முற்­றாக அழிக்­கப்­ப­ட­வில்லை என்­பது பொலிஸ் மா அதி­பரின் கருத்­தாகும்.

அர­சாங்­கத்தின் அங்­கீ­காரம்

யுத்தம் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்­டு­விட்ட போதிலும், அந்த யுத்­தத்­திற்குக் காரணம் என அர­சாங்கம் கூறி வரு­கின்ற பயங்­க­ர­வா­தத்தின் விதைகள் இன்னும் அழிக்­கப்­ப­ட­வில்லை என்று நேர­டி­யாக பொலிஸ் மா அதிபர் கூறி­யி­ருக்கின்றார்.

எனவே, பயங்­கர­வா­தத்தை முற்­றாக ஒழிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என்ற கருத்­தொ­ழுங்­கி­லேயே யாழ்ப்­பா­ணத்தின் பாது­காப்பு நிலை­மையை சீர் செய்­வ­தற்­காக முப்­ப­டை­க­ளையும் களத்தில் இறக்க வேண்டும் என்ற தீர்­மா­னத்­திற்கு அவர் வந்­துள்ளார் என்று கருத வேண்­டி­யி­ருக்­கின்­றது. இது பொலிஸ் மா அதி­பரின் நிலைப்­பாடு மட்­டு­மல்ல. அர­சாங்­கத்தின் நிலைப்­பாடும் இதுவே என்­பதும் தெளி­வா­கி­யி­ருக்­கின்­றது.

யாழ்ப்­பா­ணத்தில் பாது­காப்பு நிலை­மை­களை கட்­டுக்­கோப்பில் வைத்­தி­ருப்­ப­தற்கு முப்­ப­டை­க­ளையும் பயன்­ப­டுத்­து­கின்ற திட்­டத்­திற்கு அர­சாங்கம் அங்­கீ­காரம் அளித்­தி­ருப்­ப­தாக அவர் யாழ்ப்­பா­ணத்தில் மதத்­த­லை­வர்கள் மற்றும் சிவில் முக்­கி­யஸ்­தர்கள் கலந்து கொண்ட கூட்­டத்தில் தெரி­வித்­துள்ளார். அர­சாங்­கத்தின் இந்த அங்­கீ­கா­ரத்­துடன் பொலி­ஸா­ருக்கும் ஏனைய படைத்­த­ரப்­பி­ன­ருக்கும் இது தொடர்பில் உரிய பணிப்­பு­ரைகள் விடுக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும், அதன் அடிப்­ப­டையில் பொலி­ஸா­ருடன் முப்­ப­டை­களும் இணைந்து பாது­காப்­புக்­கான சுற்­றுக்­காவல் நட­வ­டிக்­கை­க­ளிலும், சுற்றி வளைப்பு தேடுதல் செயற்­பா­டு­க­ளையும் முன்­னெ­டுப்­ப­தற்குத் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் அவர் குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.

உண்­மையில் யாழ்ப்­பா­ணத்தில் குற்றச் செயல்­கள் அதி­க­ரித்­தி­ருக்­கின்­றன. குற்றச் செயல்­களில் ஈடு­ப­டு­ப­வர்­களே வன்­மு­றை­களில் ஈடு­பட்­டி­ருக்­கின்­றார்கள். குற்றச் செயல்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு முற்­ப­டும்­போது, பொலி­ஸா­ருக்கு எதி­ராக இந்த வன்­மு­றை­யா­ளர்கள் அவ்­வப்­போது தாக்­கு­தல்­களை நடத்­தி­யி­ருக்­கின்­றார்கள். இந்தச் சம்­ப­வங்­களில் முன்னாள் விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்கள் ஓரி­ரு­வரோ அல்­லது, ஒரு சிலரோ இல­கு­வாகப் பணம் சம்­பா­திக்கும் நோக்­கத்­திற்­காகச் செயற்­பட்­டி­ருக்­கலாம். யுத்­தத்தின் பின்­ன­ரான வட­மா­கா­ணத்தின் சமூக, பொரு­ளா­தார, அர­சியல் வாழ்க்கைச் சூழலில் அதற்­கான வாய்ப்­புக்கள் இயல்­பா­கவே உரு­வா­கி­யி­ருக்­கின்­றன.

குற்­றச்­செ­யல்­களா? பயங்­க­ர­வா­தமா?

யுத்­தத்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் வட­ப­கு­தியில் போதைப்­பொருள் கடத்தல், மணற் கொள்ளை நட­வ­டிக்­கைகள், துணி­கர கொள்ளைச் சம்­ப­வங்கள், வாள் வெட்டு குழுக்­களின் குழு மோதல்கள் என்­ப­வற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்ட குற்றச் செயல்­களே இடம்­பெற்­றி­ருக்­கின்­றன.

விடு­த­லைப்­பு­லிகள் நடத்­திய ஆயுதப் போராட்­டத்­தின்­போது பொலிஸார் மீதும், படைத்­த­ரப்­பினர் மீதும் நடத்­தப்­பட்ட தாக்­குதல் சம்­ப­வங்­களைப் போன்று அவர்­களின் வாகனத் தொட­ர­ணி­களை வழி­ம­றித்த தாக்­கு­தல்­களோ அல்­லது பாது­காப்பு கட­மையில் இருந்­த­வர்கள் மீதோ அல்­லது படை முகாம்கள் பொலிஸ் நிலை­யங்கள் என்­ப­வற்றின் மீது வலிந்து நடத்­தப்­பட்ட தாக்­குதல் சம்­ப­வங்கள் போன்ற சம்­ப­வங்கள் எதுவும் நடை­பெ­ற­வில்லை.

திட்­ட­மிட்ட வகையில் முழு­மை­யாக ஆயு­தந்­த­ரித்து, இரா­ணுவச் செயற்­பாட்­டிற்கு இணை­யான வகையில் தாக்­குதல் அணி­யாகச் சென்று எவரும் பொலிஸார் மீதோ அல்­லது படைத்­த­ரப்­பினர் மீதோ எந்தத் தாக்­கு­தல்­க­ளையும் நடத்­த­வில்லை. இத்­த­கைய நட­வ­டிக்­கை­க­ளையே, விடு­த­லைப்­பு­லி­களின் பயங்­க­ர­வாதச் செயற்­பா­டுகள் என அரச படைத்­த­ரப்­பி­னரும். அரச தரப்­பி­னரும் அடை­யா­ளப்­ப­டுத்தியி­ருந்­தார்கள்.

இந்தப் பின்­ன­ணியில், யாழ் மேல் நீதி­மன்ற நீதி­பதி இளஞ்­செ­ழியன் தனது காரில் பிர­யாணம் செய்­த­வேளை, அவ­ரு­டைய மெய்ப்­பா­து­கா­வ­ல­ரா­கிய பொலிஸ் சார்ஜன்ட், நீதி­ப­தியின் பாது­காப்­பான பிர­யா­ணத்­திற்குத் தடை­யாக, வீதியில் ஏற்­பட்­டி­ருந்த வாகன நெரி­சலை சரி­செய்யும் கட­மையில் ஈடு­பட்­டி­ருந்­த­போது, அவ­ரு­டைய உடை­மையில் இருந்த கைத்­துப்­பாக்­கியை ஒருவர் மின்னல் வேகத்தில் பறித்­தெ­டுத்து, துப்­பாக்­கிச்­சூட்டுத் தாக்­கு­தலை நடத்தி­யி­ருந்தார். இந்தச் சம்­ப­வத்தில் நீதி­ப­தியின் மெய்ப்­பா­து­கா­வ­லர்­க­ளான இரண்டு பொலி­ஸாரும் காய­ம­டைந்­தனர். அவர்­களில் ஒருவர் வைத்­தி­ய­சா­லையில் மர­ண­ம­டைந்தார். இந்தச் சம்­பவம் நீதி­பதி இளஞ்­செ­ழி­யனை இலக்கு வைத்து நடத்­தப்­பட்ட ஒரு தாக்­கு­த­லாகக் கரு­தப்­ப­டு­கின்­றது. இந்­தச்­சம்­ப­வத்தின் உண்­யை­மான தாற்­ப­ரியம் என்ன என்­பது விசா­ர­ணை­களின் மூலம் கண்­ட­றி­யப்­ப­ட­வேண்­டிய ஒரு விட­ய­மாகும். அந்த பொறுப்பு பொலி­ஸா­ரையே சார்ந்­தி­ருக்­கின்­றது.

யாழ்ப்­பா­ணத்தில் இடம்­பெ­று­கின்ற குற்றச் சம்­ப­வங்­களில் போதைப் பொருள் கடத்­தலும், மணற் கொள்ளை நட­வ­டிக்­கை­களும், அதற்கு அடுத்­த­தாக குழுக்­களின் வாள்­வெட்டுச் செயற்­பா­டு­க­ளுமே முக்­கி­ய­மான சம்­வங்­க­ளாக அமைந்­தி­ருக்­கின்­றன. இத­னை­ய­டுத்து கொள்­ளை­யர்­களின் நட­வ­டிக்­கை­க­ளாக வீடு­களில் புகுந்து உரி­மை­யா­ளர்­களைத் தாக்கிக் கொள்­ளை­ய­டிப்­பது, தங்க நகை­களைக் கள­வாடிச் செல்­வது போன்ற சம்­ப­வங்கள் இடம்­பெற்றிருக்­கின்­றன. இவற்­றுடன் பெண்கள் மீதான வன்­மு­றை­க­ளாக பாலியல் தொல்­லை­களும், பாலியல் குற்­றங்­களும் கொலை­களும் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. இவற்றை பயங்­க­ர­வாதச் செயல்கள் என்ற இலங்கை அர­ச­ப­டை­க­ளி­னதும், அர­சாங்­கத்­தி­னதும் பயங்­க­ர­வாத வரை­ய­றைக்குள் உட்­ப­டுத்தி பயங்­க­ர­வாதச் செயற்­பா­டுகள் என்ற முடி­வுக்கு வர­மு­டி­யாது.

போதைப்­பொருள் கடத்தல்

இந்தக் குற்றச் செயல்­களில் - குறிப்­பாக போதைப்­பொருள் கடத்தல் என்­பது சர்­வ­தேச ரீதியில் திட்­ட­மிட்ட வகையில் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற பாரி­ய­தொரு குற்றச் செய­லாகும். இது பயங்­க­ர­வாதச் செயல்­களில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளுக்­கான நிதி­மூ­லத்தைப் பெற்றுத் தரு­கின்ற ஒரு நட­வ­டிக்­கை­யாக வேண்­டு­மானால் கரு­தலாம். ஆனாலும் அதற்­கு­ரிய ஆதா­ரங்கள் கண்­ட­றி­யப்­பட வேண்டும்.

ஆனால் யாழ்ப்­பா­ணத்தைப் பொறுத்­த­மட்டில், இந்­தி­யாவில் இருந்து கேரள கஞ்­சாவும், ஹெரோயின் போன்ற மோச­மான போதைப்­பொ­ருளும் கடத்தி வரப்­ப­டு­கின்­றன. இந்தக் கடத்­தல்கள் அதி­கா­ர­ப­லத்­தையும், பண­ப­லத்­தையும் கொண்ட பெரி­ய­தொரு சக்­தியின் பின்­ன­ணி­யி­லேயே இடம்­பெற்று வரு­வ­தாகக் கரு­தப்­ப­டு­கின்­றது. ஏனெனில் பொலி­ஸாரும் கடற்­ப­டை­யி­னரும் போதைப்­பொருள் கடத்­தல்­களை முறி­ய­டிக்கும் பிரி­வி­னரும் இணைந்தும் தனித்­த­னி­யா­கவும், நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருக்கின்ற போதிலும் கடத்தல் நட­வ­டிக்­கை­களை முற்­றாக முறி­ய­டிக்க முடி­யா­தி­ருக்­கின்­றது.

இந்த போதைப்­பொருள் கடத்தல் செயற்­பா­டா­னது யாழ்ப்­பா­ணத்தை மட்­டு­மல்ல தலை­நகர் கொழும்­பையும் ஆட்­டிப்­ப­டைத்துக் கொண்­டி­ருக்­கின்­றது. அதனை முடி­வுக்குக் கொண்டு வரு­வ­தற்கோ அல்­லது பெரும் தொகையில் கைப்­பற்­றப்­பட்ட அந்த போதைப் பொருள் கடத்­தலில் ஈடு­பட்­டி­ருப்­ப­வர்கள் யார் என்­பதைக் கூட கண்டு பிடிக்க முடி­யாத நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது.

யாழ்ப்­பா­ணத்தின் பாது­காப்பு நிலை­மையைக் கண்­கா­ணிக்­கின்ற பொலிஸார், அங்கு நடை­பெ­று­கின்ற சம்­ப­வங்­களை இவ்­வாறு வகைப்­ப­டுத்தி நோக்­கி­யி­ருப்­பார்கள் என்­பதில் சந்­தே­க­மில்லை. சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நாட்­டு­கின்ற பொறுப்­பு­டைய பொலிஸார் இன்னும் ஆழ­மா­கவும் பொலி­ஸா­ருக்கே உரிய முறை­யிலும் சீரான முறையில் அந்த சம்­ப­வங்­களை வகைப்­ப­டுத்தி அவைகள் குற்­றச்­செ­யல்­களா அல்­லது உண்­மை­யி­லேயே பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­கள்­தானா என்­பதைத் தீர்­மா­னித்­தி­ருக்க வேண்டும். ஆனால், யாழ்ப்­பா­ணத்தின் நிலைமை தொடர்பில் அவ்­வா­றா­ன­தொரு மதிப்­பீடு நடத்­தப்பட்டதா என்­பது தெரி­ய­வில்லை.

இத்­த­கைய ஒரு நிலை­மை­யில்தான் யாழ். மேல் நீதி­மன்ற நீதி­ப­தியின் மெய்ப்­பா­து­கா­வ­லர்­க­ளான இரண்டு பொலிஸார் மீது நல்­லூரில் நடத்­தப்­பட்ட துப்­பாக்கிச் சூட்டுத் தாக்­குதல் கொக்­குவில் பகு­தியில் கோப்பாய் பொலிஸ் நிலை­யத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸார் மீது நடத்­தப்­பட்ட வாள்­வெட்டு தாக்­குதல் ஆகிய சம்­ப­வங்­க­ளை­ய­டுத்து யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் செய்த பொலிஸ் மா அதிபர் பயங்­க­ர­வாத விதை இன்னும் அங்கு அழிக்­கப்­ப­ட­வில்லை என கூறி­யி­ருக்­கின்றார்.

ஆவா குழு­வி­னரின் செயற்­பா­டுகள்

அதே­வேளை, வாள்­வெட்டு சம்­ப­வங்­களில் ஈடு­பட்­டி­ருந்­த­தாக முன்னர் அடை­யாளம் காணப்­பட்­டி­ருந்த ஆவா குழு­வி­னரே, கோப்பாய் பொலிஸ் நிலை­யத்தைச் சேர்ந்த பொலிஸார் இரு­வரை கொக்­குவில் பகு­தியில் துரத்தித் துரத்தி வாளால் வெட்­டி­ய­தாக பொலிஸார் தமது விசா­ர­ணை­களின் மூலம் கண்­ட­றிந்து கூறி­யி­ருக்­கின்­றார்கள்.

ஆவா குழு­வினர் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்த­பாய ராஜ­பக் ஷவினால், உரு­வாக்­கப்­பட்டு, இரா­ணுவ பிரி­கே­டியர் ஒரு­வரின் கீழ் செயற்­பட்டு வந்­த­தாக கடந்த வருடம் ஆவா குழு­வி­னரின் செயற்­பா­டு­க­ளினால் யாழ்ப்­பாணம் கதி­க­லங்­கி­யி­ருந்த போது அமைச்­ச­ரவைப் பேச்­சா­ள­ரா­கிய அமைச்சர் ராஜித சேனா­ரத்ன கூறி­யி­ருந்தார். அமைச்­ச­ரவை முடி­வுகள் தொடர்­பாக செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசி­ய­போது, யாழ்ப்­பா­ணத்தின் நிலைமை குறித்து கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் இந்தத் தக­வலை வெளி­யிட்­டி­ருந்தார்.

யாழ். பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் இருவர் இரவு வேளையில் குளப்­பிட்டிச் சந்­தியில் மோட்டார் சைக்­கிளில் சென்ற போது பொலி­ஸாரின் துப்­பாக்கிச் சூட்டில் கொல்­லப்­பட்­டி­ருந்த சம்­பவம் தொடர்பில் முழு யாழ்ப்­பா­ணமும் கொதிப்­பேறி இருந்­தது. அந்த வேளை­யில்தான் இரண்டு புல­னாய்வு பொலிஸார் மீது ஆவா குழு­வினர் வாள்­வெட்டுத் தாக்­கு­தலை நடத்­தி­யி­ருந்­தனர். அப்­போது பொலிஸார் மீது நடத்­தப்­பட்ட இந்தத் தாக்­கு­தலை பயங்­க­ர­வாதப் பிரச்­சி­னை­யாக எவரும் நோக்­க­வில்லை.

மாறாக, அத்­து­மீ­றிய வகையில் அதி­க­ரித்த்­தி­ருந்த வாள்­வெட்டு குழுக்­களின் அட்­ட­கா­ச­மான செயற்­பா­டு­களைக் கட்­டுப்­ப­டுத்தி சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நாட்­டு­வ­தற்கு பொலி­ஸா­ரினால் முடி­யாமல் போயி­ருப்­ப­தா­கவும், தங்­களை முகாம்­களில் இருந்து வெளியில் விட்டால் உட­ன­டி­யா­கவே வாள்­வெட்டு சம்­ப­வங்­களைக் கட்­டுப்­ப­டுத்தி சட்­டத்­தையும் ஒழுங்­கையும்நிலை நாட்ட முடியும் என்று அப்­போ­தைய யாழ். மாவட்ட இரா­ணுவத் தள­பதி கூறி­யி­ருந்தார்.

குற்றச் செயல்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு இரா­ணு­வத்­தி­ன­ரா­லேயே முடியும். பொலி­ஸா­ரினால் அது முடி­யாது என்ற கருத்தை அவர் இதன் மூலம் வெளிப்­ப­டை­யா­கவே தெரி­வித்­தி­ருந்தார்.

பொலி­ஸாரின் திற­மையைக் குறைத்து மதிப்­பிடும் வகையில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்த போதிலும், வடக்கில் இருந்து இரா­ணு­வத்தை வெளி­யேற்ற வேண்டும் என்ற பர­வ­லாக எழுந்­தி­ருந்த அழுத்­தத்தைக் குறைத்து, இரா­ணுவம் வடக்கில் நிலை­கொண்­டி­ருக்க வேண்­டி­யதன் அவ­சி­யத்தை நியா­யப்­ப­டுத்தி வலி­யு­றுத்­து­வ­தற்­கா­கவே இத்­த­கைய கருத்தை அப்­போ­தைய யாழ். மாவட்ட இரா­ணுவத் தள­பதி வெளி­யிட்­டி­ருந்தார் என்ற விமர்­ச­னமும் எழுந்­தி­ருந்­தது.

கடந்த வரு­டத்தைப் போலவே இப்­போதும் வாள்­வெட்டு குழு­வினர் பொலிஸார் இரண்டு பேர் மீது வாள்­வெட்டு தாக்­குதல் நடத்­தி­யி­ருக்­கின்­றார்கள். அந்தக் குழுவின் தலைவன் முன்னாள் விடு­த­லைப்­புலி உறுப்­பினர் என பொலிஸ் மா அதிபர் தெரி­வித்­தி­ருந்த போதிலும், பின்னர் இரண்டு பேரைக் கைது செய்த பொலிஸார், அந்தத் தாக்­கு­தலை ஆவா குழு­வி­னரே நடத்­தி­யி­ருந்­த­தாகத் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர்.

இரா­ணுவ முகாம்­களை அகற்ற முடி­யாது

இந்தத் தாக்­கு­தலைத் தொடர்ந்து மீண்டும் இரா­ணுவ முகாம்­களை அகற்­று­வது தொடர்­பி­லான கருத்­துக்கள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன. யாழ்ப்­பா­ணத்தில் ஆவா குழு­வி­ன­ரு­டைய நட­வ­டிக்­கை­களும் குற்றச் செயல்­களும் யாழ்ப்­பா­ணத்தில் அதி­க­ரித்­தி­ருக்­கின்­றன. ஆகவே யாழ்ப்­பா­ணத்தில் உள்ள இரா­ணுவ முகாம்­களை அகற்ற முடி­யாது என சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்­த­வரும் அமைச்­ச­ரு­மா­கிய மகிந்த சம­ர­சிங்க தெரி­வித்­துள்ளார்.

சர்­வ­தேச நாடுகள் யாழ்ப்­பா­ணத்தில் உள்ள இரா­ணுவ முகாம்கள் குறித்து கரி­சனை கொண்­டுள்­ளன. அவற்றை அகற்ற வேண்டும் என்று அவைகள் குர­லெ­ழுப்பி வரு­கின்­றன. அவர்­க­ளு­டைய குர­லுக்கு செவி­சாய்த்து, யாழ்ப்­பா­ணத்தில் குற்­றச்­செ­யல்கள் அதி­க­ரித்­துள்ள நிலையில் அவ­ச­ரப்­பட்டு இரா­ணுவ முகாம்­களை அகற்ற முடி­யாது என அமைச்சர் சம­ர­சிங்க கூறி­யுள்ளார்.

அத்­துடன் புனர்­வாழ்வு பயிற்­சியின் பின்னர் சமூ­கத்தில் இணைக்­கப்­பட்­டுள்ள 11 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட முன்னாள் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு அளிக்­கப்­பட்ட புனர்­வாழ்வுப் பயற்­சிகள் சரி­யா­னதா என்­பதைப் பார்க்க வேண்­டி­யி­ருக்கின்றது என்றும் அமைச்சர் மகிந்த சம­ர­சிங்க குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.

ஆனால் முன்­னைய அர­சாங்­கமே ஆவா குழுவை உரு­வாக்கிச் செயற்­ப­டுத்­தி­யி­ருந்­தது என்று அமைச்­ச­ர­வையின் இணைப் பேச்­சா­ள­ரா­கிய அமைச்சர் ராஜித சேனா­ரத்ன மீண்டும் குற்றம் சுமத்­தி­யுள்ளார். ஆவா குழு­வினர் தலை­யெ­டுத்­துள்ள அதே­வேளை, அர­சாங்கம் முன்­னெ­டுத்­துள்ள நல்­லி­ணக்கச் செயற்­பா­டு­க­ளுக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்தும் வகையில் வடக்கில் பாரிய குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு சில தீய­சக்­திகள் முயற்­சித்­தி­ருப்­ப­தாக அமைச்­ச­ர­வையின் மற்­று­மொரு பேச்­சா­ள­ரா­கிய தயா­சிறி ஜய­சே­கர குற்றம் சுமத்­தி­யி­ருக்­கின்றார்.

முன்னாள் விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்கள்

ஆனாலும் யாழ்ப்­பா­ணத்தில் இடம்­பெற்று வரு­கின்ற குற்றச் செயல்­க­ளுடன் முன்னாள் விடு­த­லைப்­பு­லி­களைத் தொடர்­பு­ ப­டுத்தி கருத்­துக்­களை எழுந்­த­மா­ன­மாக வெளி­யி­டு­வதை பார­தூ­ர­மான விட­ய­மா­கவே நோக்க வேண்­டி­யி­ருக்­கின்­றது. ஏனெனில் புனர்­வாழ்வுப் பயிற்சி என்ற போர்­வையில் இரா­ணுவ தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்டு, இரா­ணுவ அர­சியல் ரீதி­யாக மூளை சலவை செய்­யப்­பட்ட ஒரு நிலையில் மன­மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி சமூ­கத்தில் இணைக்­கப்­பட்­டுள்ள முன்னாள் விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்கள், போருக்குப் பிந்­திய தமிழ் சமூ­கத்தில் தமக்­கென தகுந்த வாழ்க்­கை­யையும் வாழ்க்கை முறை­யையும் அமைத்துக் கொள்ள முடி­யாமல் தவிக்­கின்­றார்கள்.

விடு­தலைப் போராட்­டத்­திற்­காக குடும்பம் சுற்றம் சூழ­லையும், கல்­வி­யையும் எதி­ர­்கால கன­வு­க­ளையும் துறந்­து­விட்டு வெளி­யேறிச் சென்ற அவர்கள் திரும்பி வந்­த­போது, சாதா­ரண சிவில் வாழ்க்­கையில் ஒட்ட முடி­யா­த­வர்­க­ளாக – அத்­த­கைய வாழ்க்கைச் சூழலில் இயல்­பாக ஏற்­றுக்­கொள்ள முடி­யா­த­வர்­க­ளா­கவே அவர்­க­ளு­டைய சமூக மீள் பிர­வேசம் அமைந்­தி­ருந்­தது. யுத்தம் முடி­வுக்கு வந்து எட்டு வரு­டங்­க­ளா­கி­விட்ட போதிலும், அவர்­க­ளு­டைய சிவில் வாழ்க்கை போராட்டம் நிறைந்­த­தா­கவும், சமூ­கத்தில் முழுமையாக அங்கீகரிக்கப்படாத ஒன்றாகவுமே காணப்படுகின்றது.

வெளிப்படையாகச் சொல்வதானால், அன்றாட உணவுக்கும் அன்றாட வாழ்க்கைக்கும் அல்லாட வேண்டியவர்களாகவே அவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் தனிப்பட்ட முறையிலோ அல்லது ஒன்றிணைந்ததோர் அமைப்பு ரீதியிலோ நன்மையான காரியங்களில்கூட ஈடுபட முடியாதவர்களாகவே காணப்படுகின்றார்கள். யுத்தத்திற்குப் பிந்திய சமூகக் கட்டமைப்பில் ஏனையவர்களின் பின்னால் செல்ல வேண்டியவர்களாக இருக்கின்றார்களேயொழிய, சமூகத்தையும், சமூகத்தில் உள்ளவர்களையும் தலைமைதாங்கி ஆளுமையுடன் வழிநடத்திச் செல்லத்தக்க தலைமைத்துவ நிலைமையில் அவர்கள் இல்லை.

இத்தகைய ஒரு சூழலில் முன்னாள் போராளிகளைக் குற்றச் செயல்களுடனும், பயங்கரவாதச் செயற்பாடுகளுடனும் இணைத்துக் குற்றம் சுமத்துவதும் கருத்துக்களை வெளியிடுவதும் அபத்தமான செயற்பாடாகவே நோக்க வேண்டியிருக்கின்றது,

புனர்வாழ்வு பயிற்சி பெற்ற பல்லாயிரக்கணக்கான முன்னாள் போராளிகள் சிவில் பாதுகாப்புப் படை என்ற பெயரில் இராணுவத்தின் நேரடி கண்காணிப்பில் இருந்து வருகின்றார்கள். அந்த கட்டமைப்புக்குள் இணைக்கப்படாதவர்களை விசேட புலனாய்வு பிரிவினர் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகின்றார்கள். இந்த கண்காணிப்பு நடவடிக்கையின் மூலம், முன்னாள் போராளிகளின் ஒவ்வோர் அசைவும் மிகவும் நுணுக்கமாக கண்காணிக்கப்பட்டு, அறிக்கைகள் தயாரிக்கப்படுகின்றன. இத்தகையதொரு நிலையில் அவர்கள் மீண்டும் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட முயற்சிக்கின்றார்கள் என்ற தொனியில் கருத்துக்களை வெளியிட்டு, வடக்கில் அதுவும் யாழ்.மாவட்டத்தையும், கிளிநொச்சி மாவட்டத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கிய யாழ் குடாநாட்டை இராணுவ பாதுகாப்புக்கு உட்படுத்துவது நியயமான நடவடிக்கையாக அமைய முடியாது.

யாழ். மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சட்டம் ஒழுங்கு சீர்குலைவை பயங்கரவாதத்துடன் முடிச்சிடுவதை தவிர்த்து, செயற்திறன் மிக்க வகையில் பொலிஸாரின் நடவடிக்கைகளை நுணுக்கமாக முன்னெடுப்பதன் மூலம் அங்கு ஏற்பட்டுள்ள நிலைமையை சீர் செய்ய முடியும். அதற்குரிய வல்லமை பொலிஸ் திணைக்களத்திடமும், பொலிஸாரிடமும் இருக்கின்றது.

எனவே சீரான பொலிஸ் செயற்பாடுகளின் மூலம் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டி, யாழ். மக்களின் நம்பிக்கையையும் அபிமானத்தையும் பெற வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.