மாபெரும் போராட்டத்திற்கு எம்.கே.சிவாஜிலிங்கம் அழைப்பு !
யாழ். ஊடக மையத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே தனது கருத்தை குறிப்பிட்டார். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போனோரின் உறவினர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30ஆம் திகதி இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் அனைவரும் இப்போராட்டத்தில் கலந்துக் கொண்டு ஆதரவளிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார். அன்றைய போராட்டம் பாரிய மக்கள் போராட்டமாக வெடிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
அதேவேளை, தமிழகத்திலும் போராட்டங்களை நடத்தி காணாமல் ஆக்க ப்பட்டோரது உறவுகளுக்கு ஆதரவு வழங்குமாறு தாய் தமிழக உறவுகளை வேண்டி நிற்பதாகவும் கோரிக்கை விடுத்துள்ளார்.