யாழ். குடாநாட்டில் 1000 சிறப்பு அதிரடிப்படை களத்தில்!
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும்
வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்காக 1000 சிறப்புப் படையினரை களத்தில் இறக்கியுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த சிறப்புப் படையினர் உந்துருளிகளில் ரோந்து, கண்காணிப்பு, சோதனை நடவடிக்கைகளில் குழுக்களாக இணைந்து செயற்பட்டு வருவதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இவ்வளவு காலமும் சிறப்பு அதிரடிப்படையினர் இரவு நேர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும், வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்த பின்னர் அவர்கள் பகல் நேர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகவும் குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
அத்துடன், சிறப்பு அதிரடிப்படையினருடன், சிறப்புக் காவல்துறையினரும் இணைக்கப்பட்டுள்ளதாகவும், யாழ்க்குடாநாட்டில் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சிறப்புக் குழுவொன்றும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.