யாழ் கடலில் மாணவர்கள் மூழ்கியமைக்கு காரணம் - மதுபோதை
பாடசாலை மாணவர்கள் ஆறுபேர் யாழ். கடலேரியில் மண்டைதீவை அண்டிய சிறுத்தீவு பகுதியில் நீரில் மூழ்கி பலியானமைக்கான காரணம் படகு கடலில் மூழ்கிய போது ஏழு மாணவர்களும் மதுபோதையில் இரு ந்ததாகவும் படகு பாதுகாப்பிற்கான கவசங்களை அணிந்திருக்கவில்லை யெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சைகளை நிறைவுசெய்த பின்னர் பிறந்தநாள் கொண்டா ட்டத்திற்காக படகுப் பயணமொன்றை மேற்கொண்ட போதே இவ் விபத்து நடந்தமை குறிப்பிடத்தக்கது.
கடலில் மூழ்கிய ஏழு மாணவர்களில் ஆறு பேர் உயிரிழந்ததுடன், ஒருவர் நீந்திக் கரை சேர்ந்த கரையொதுங்கிய மாணவன் யாழ்ப்பாணம் குருநகர் மீனவர்களுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் ஏனைய 6 மாணவர்களும் சடலங்களாக மீட்டகப்பட்டதுடன் யாழ்ப்பாணம் குருநகர் மீனவர்களால் மண்டைதீவு கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு கடற்படையினர் வருகை தருவதற்கு முன்னதாக யாழ்ப்பாணம் குருநகர் மீனவர்கள் மிகுந்த போராட்டத்தின் மத்தியில் பாதுகாப்பு அங்கிகள் இல்லாத நிலையில் 4 மாணவர்களை சடலங்களாக மீட்டனர்.
அதனைத்தொடர்ந்து ஏனைய இரு சடலங்களும் கடற்படையினரால் மீட்கப்பட்டது.
இதில் மூன்று மணி நேர தேடுதலின் பின்னர் ஆறாவது இளைஞனின் சடலம் மீட்கப்பட்டது.
யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவர்களான சின்னத்தம்பி நாகசுலோசன், லிங்கநாதன் ரஜீவ் மற்றும் ஜெயசாந்த் தினேஸ், யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் தேவகுமார் தனுரதன், யாழ்ப்பாணம் பெரியபுலம் மகா வித்தியாலய மாணவன் கோணேஸ்வரன் பிரவீன் மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவன் தனுஷன் ஆகியோர் உயிரிழந்து ள்ளனர்.
நண்பன் ஒருவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, 18 மாணவர்கள் யாழ்ப்பா ணம் மண்டைதீவு கடற்கரைக்கு சென்றதுடன், இதில் 7 பேர் பயணம் செய்த படகே விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
உயிரிழந்த ஆறு மாணவர்களினதும் சடலங்கள் யாழ் போதானா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
6 சடலங்களும் யாழ் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு ஒப்படைக்கப்பட்டிருப்பதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கடற்படையினருடன் இணைந்து ஊர்காவற்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து ஏனைய 12 பேரும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பின்னர் உயிரிழந்த 6 பேரின் உறவினர்களிடமும் பொலிஸாரால் வாக்கு மூலம் பதிவுசெய்யப்பட்டது.
இந்நிலையில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், சம்பவ இடத்திற்கு சென்று நிலைமைகள் தொடர்பில் பொலிசாருடன் ஆராய்ந்தமை குறிப்பிடத்தக்கது.