ஊடகவியலாளர்களை விரட்டிய - கிராம சேவகர் - வவுனியா
வவுனியா - பூவரசங்குளம் கிராம அலு வலரின் அலுவலகத்திற்குச் சென்ற ஊடக வியலாளர்களை அலுவலக வாயிலில் வைத்து பொதுமக்கள் முன்னிலையில் அவமரியாதைக்கு உட்படுத்திய சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. வரட்சி நிவாரண விடயம் குறித்து கிராம அலுவல ரிடம் சென்ற மக்களை, கிராம அலுவலர் அநாகரிகமான வார்த்தைகளால் பேசுவ தாக மக்கள் குற்றச்சாட்டை முன்வை த்ததை அடுத்து குறித்த அலுவலகத்துக்கு சென்ற ஊடகவியலாளர்கள், தமக்கு கிடைத்த தகவலின் உண்மைத் தன்மை குறித்து அறிவதற்காக கிராம அலுவலரின் அலுவ லகத்திற்குள் நுழைய முற்பட்ட போது, ஊடகவியலாளர்களைப் பார்த்து “உங்களை யார் உள்ளே விட்டது. உடனே வெளியே செல்லுங்கள்” என்று அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் கடும் தொனியில் எச்சரித்த துடன் குறித்த ஊடகவியலாளர்களை அங்கிருந்து வெளியேற்றியுள்ளார்.
இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசாவிடம் தெரியப்படுத்தியதுடன், பாதிக்க ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் மக்களிடம் அலுவலகத்திற்கு வெளியில் வைத்து தக வல்களைச் சேகரித்து விட்டு திரும்பியுள்ளனர்.
ஊடக சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக நல்லாட்சி அரசாங்கம் மேடைகளில் பிரச்சாரம் செய்துவரும் நிலையில், அரசாங்கத்தின் கீழ் மக்களின் வரிப்பணத்தில் செயற்படும் அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் பலர் முன்னி லையில் அவமானப்படுத்தும் வகையிலும் நடந்து கொள்வது ஊடக சுதந்திரத்தை மீறும் செயல் என்று பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.