Breaking News

முன்னாள் போராளி கருணாவிற்கு புனர்வாழ்வு அளியுங்கள் !

கருணா அம்மான் என அழைக்கப்ப டும் விநாயகமூர்த்தி முரளிதரனை புனர்வாழ்விற்கு உட்படுத்தக்கோரி புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமய மாக்கப்பட்ட ஒன்றியத்தின் தலைவர் அறிக்கை விடுத்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகள் மீது அதிகளவில் தமிழ் அரசியல் தலைவர்களே அதிக குற்றச்சாட்டுகளை சுமத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அம்பாறை மாவட்டத்தில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயமாக்கப்பட்ட நபர்களின் ஒன்றியத்தின் ஊடகச் சந்திப்பில் கலந்து உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இஸ்லாமிய இனத்தைச் சேர்ந்த குற்றப்புலனாய்வு பிரிவினர் சிலரே அதிகளவில் புனர்வாழ்வி ற்குட்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகளிடம் விசாரணைகளை மேற்கொ ள்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.