பாப்பரசர் பிரார்த்தனை மக்களை காப்பாற்றுங்கள்- இயேசுவிடம்
சர்வதேசத்தில் பயங்கரவாத தாக்குத ல்களுக்கு எதிராக புனித பாப்பரசர் தமது கண்டனத்தை பகிரங்கப்படுத்தி யுள்ளார். மனிதாபிமானமற்ற தாக்கு தல்களிலிருந்து சர்வதேசத்தையும் மக்களையும் பாதுகாக்குமாறு விசேட பிராத்தனையிலும் ஈடுபட்டுள்ளார். புர்கினோ பசோ, ஸ்பெயின் மற்றும் பின்லாந்தில் இடம்பெற்ற தாக்குதல்க ளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்தே விஷேட பிரார்த்தனை நடத்தப்பட்டிருந்தது. நேற்றைய தினம் புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடத்தப்பட்ட குறித்த பிராத்தணையில் பலர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, விசேட பிரார்த்தனை நிகழ்வும், மக்கள் கூட்டத்தொடரும் இடம்பெற்றுள்ளது.
புர்கினோ பசோவில் கடந்த வாரம் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 18 பேர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்தனர்.
இதனை தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை ஸ்பெயினின் பார்சிலோனாவில் இடம்பெற்ற தாக்குதலில் 14 பேர் உயிரிழந்ததுடன், நூற்றிற்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
அத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை பின்லாந்து நகரொன்றில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் இருவர் உயிரிழந்ததுடன், எட்டு பேர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.