நல்லாட்சியின் நலன் கருதி ரவி பதவி விலகுவதை வரவேற்கின்றேன்: சம்பந்தன்
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவியில் இருந்து விலகுவதாக நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் அறிவித்த தையடுத்து சபையில் எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றியபோது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க” தவறு செய்ததாக நீதிமன்ற த்தினால் கண்டறியப்படவில்லை.
எனினும் அவர் துணிச்சலாக தனது முடிவினை அறிவித்ததற்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தனிமனிதனது அடிப்படை உரிமைகளின் பிரகாரம் நிரூபிக்கப்படாத வரையில் அவர் நிரபராதியாகவே கொள்ளப்படுவார்.
எனவே தற்போது வரையில் அவர் “குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை” என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.