அமைச்சரவை இழுபறி முடிவுக்கு வந்தது?-பிந்தி கிடைத்த செய்தி
அமைச்சரவை நியமனம் தொடர்பான சிக்கல் இன்றுடன் முடிவுக்கு வருமென முதலமைச்சு வட்டாரங்களிலிருந்து தமிழ்கிங்டொம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுவரை இழுபறியில் இருந்த சுகாதார அமைச்சர் மற்றும் போக்குவரத்து மற்றும் விவசாயம் ஆகியவற்றில் முறையே சுகாதார அமைச்சராக குணசீலன்(ரெலோ),விவசாய அமைச்சராக சிவநேசன்(புளொட்),மகளிர் விவகாரம் மற்றும் சமூகசேவை அனந்தி (தமிழரசு) மற்றும் கல்வி அமைச்சராக சர்வேஸ்வரன்(ஈ.பி.ஆர்.எல்.எவ்) ஆகியோரும் கடமையாற்றுவார்கள் என தெரியவருகின்றது.
வழமைபோல முதலமைச்சர் எல்லோருடைய எதிர் பார்ப்புகளுக்கும் அப்பால் சென்று நான்கு அமைச்சர்களையும் நான்கு கட்சிகளுக்கு பகிர்ந்து வழங்கியுள்ளபோதும் தமிழரசு மற்றும் ரெலோ என்பன இந்த நியமனங்களை எவ்வளவிற்கு ஏற்றுக்கொள்ளும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏற்கனவே குணசீலனின் தெரிவிற்கு ரெலோ ஆட்சேபனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.