அரியவகை திமிங்கலங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை
அரியவகை திமிங்கலங்களை பாது காப்பதற்கு ஒட்டாவா அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என மத்திய மீனவளத்துறையினர் தெரி வித்துள்ளனர்.
புனித லோரன்ஸ் வளைகுடாவில், கடந்த ஜூன் மாத ஆரம்பம் முதல் 10 அரிய திமிங்க லங்கள் உயிரிழந்ததை தொடர்ந்தே மத்திய அமைச்சரின் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் ”திமிங்கலங்களின் உயிரிழப்பு தொடர்பில் விஞ்ஞானிகள் சாத்தி யமான ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதன்படி, குறித்த திமிங்கல இனத்தை பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து பணிகளையும் கனேடிய அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.
இதேவேளை, திமிங்கலங்களின் உயிரிழப்பை தடுப்பதற்கான சாத்தியமான நடவடிக்கைகளை மீன்பிடித் திணைக்களம் ஏற்கனவே முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.