ராஜபக்சக்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்குமாறு - நாமல் சவால் விடுகின்றார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்சவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சவால் விடுத்துள்ளார். தெவிநுவரப் பகுதி நிகழ்வொன்றில் கலந்து உரை யாற்றிய அவர், தற்போதைய அரசா ங்கத்தில் உள்ளவர்களையும் விசார ணைக்கு உட்படுத்த வேண்டுமென கோரியுள்ளார்.
ராஜபக்சவின் உடமைகள் குறித்து ஒரு சில தரப்பினர் கருத்துக்களை வெளியி ட்டுள்ளதாகவும் 21 தலைமுறைக்கான சொத்துக்கள் ராஜபக்சவிடம் உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கூறி யதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உள்ள சொத்துக்கள் குறித்து கேள்வி எழுப்புமாறு அனுர குமார திஸாநாயக்கவிடம் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் மக்கள், பிரஜைகளை உயர்நிலைக்கு கொண்டு செல்ல ஏதாவது செய்திருந்தால் திருப்திகரம் எனத் தெரிவித்துள்ளார்.
ராஜபக்சேக்கள் திருடர்கள் என கூறுவோர் தமது பெயரில் அல்லாமல் பில்லியன் ரூபா பெறுமதியான ஹோட்டலை நுவரெலியாவில் திறந்துள்ளா ர்கள் என நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.