Breaking News

துரோகி கருணா காதலியுடன் இந்தியாவில் .....

கேபி எனப்படும் குமரன் பத்மநாதனுக்கும் புனர்வாழ்வளித்தமையால் அவர் திறமையாச் செயற்படுகின்றார்! 


 கருணா விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து தனது துரோகச் செயற்பாட்டின் நிமித்தம் இந்தியாவில் இரண்டு வருடங்கள் தனது பொழுது போக்கை கழித்தார்.  

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் குமரன் பத்மநாதன் என அழை க்கப்படும் கேபிக்கு பிரத்தியேகமாக புனர்வாழ்வளிக்கப்பட்டதாலேயே அவர் தற்போது முன்னேற்றகரமாகச் செயற்படுகின்றார் என சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

 12ஆயிரத்திற்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். ஏன் விடுதலைப் புலிகளிலிருந்து பிரிந்த கருணா அம்மானுக்கும், கேபி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கும் புனர்வாழ்வளிக்காது, உயர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துளள்ளார். 

மேலும் தெரிவிக்கையில், கருணா விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து தனது பாதுகாப்பிற்காக இரண்டு வருடங்கள் தங்கியிருந்தார். அத்து டன் அரசியலிலும் ஈடுபட்டமையினால் அவர் இயல்பாக புனர்வாழ்வு பெற்ற தாக கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.