சிங்கப்பூராக மாறுமாம் இலங்கை - சீனா
சீனா இலங்கையின் நலனிற்காக
எதிர்வரும் 15 ஆண்டுகளுக்குள் இல ங்கையை மற்றுமொரு சிங்கப்பூராக அபிவிருத்தி செய்வதற்கு ஏற்ற வகை யில் சீனா செயற்பட்டுக்கொண்டிரு க்கின்றது. தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்தும் வழங்குவதாகவும் இலங்கைக்கான சீன தூதுவர் யூ ஷியான்லியாங் தெரிவித்தார். சீன உதவி திட்டத்தின் கீழ் ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு1.8 மில்லியன் ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்களை வழங்கும் நிகழ்வு தங்காலையில் இடம் பெற்றபோது உரையாற்றும் போதே சீன தூதுவர் மேற்கண்டவாறு சிறப்புற வாக்களித்தாா்.
இலங்கை சீனாவின் மிகச் சிறப்பான நண்பன் எனவும். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்பு 70 ஆண்டுகளுக்கும் மேலான பழைமையான உறவாகும்.
இரு நாடுகளின் நீண்டகால உறவிற்கு காரணமாகிய இறப்பர்- அரிசி ஒப்பந்தத்தை இரண்டு நாடுகளின் மக்களுக்கு தெரிந்த விடயம். இந்த நட்பின் அடையாளமாக கடந்த பல ஆண்டுகளாக சீனா தனது அனைத்துலக உதவி திட்டத்தில் அதிகூடிய பங்கை இலங்கைக்கு வழங்குகின்றது.
இலங்கையின் அபிவிருத்தி மற்றும் இந்த மக்கள் மீது சீனாவிற்கு தனிப்பட்ட அக்கறையும் பொறுப்பும் உள்ளது.
தற்போதைய சூழலில் இலங்கைக்கு அபிவிருத்தி என்பது மிகவும் அத்தியாவசியமான விடயம்.
எனவே நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கத்துடன் மக்களும் ஒத்துழைக்க வேண்டும். இலங்கையின் தென்பகுதியில் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க சீனா ஒத்துழைப்பு வழங்க உள்ளது.
இளைஞர்களின் தொழில்நுட்ப ஆற்றலை விருத்தி செய்தல் , மீன்பிடி மற்றும் ஏனைய துறைகளில் தொழில்நுட்ப வசதிகளை அதிகரித்தல் போன்ற விடயங்களுக்கு சீனா உதவு உள்ளது.
சீன – இலங்கை நட்புறவு சங்கத்தின் மூலம், 1300 இலங்கை மாணவர்களுக்கு சீனா புலமைப்பரிசில் வாய்ப்புகளை வழங்கியுள்ளது.
எதிர்காலத்தில் 2000 ஆக அதிகரிக்கப்பதற்கு சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவ்வாறு பலவேறு திட்டங்கள் தொடர்பில் சீனா மிகவும் ஈடுப்பாடுடன் செயற்பட்டு வருகின்றது.
குறிப்பாக தென்பகுதி மீனவர்களுக்கான வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான திட்டத்தை ஆரம்பிக்கவும் உத்தேசித்துள்ளது.
சீனாவின் ஷங்காய் நகரத்தைப் போன்று இலங்கையின் தென்பகுதியை அபிவிருத்தி செய்வதற்கு சீனா தொடர்ந்தும் தேவையான உதவிகளை வழங்கவுள்ளது.
அடுத்த 15 ஆண்டுகளில் இலங்கை சிங்கப்பூரின் நிலைக்கு தரமுயர்த்துவ தற்காக சீனா தொடர்ந்து உதவிகளை வழங்க . இலங்கையின் நலனில் சீனா அக்கறையுடன் உள்ளது எனக் குறிப்பிட்டார்.