கடற்படைத் தளபதியாக சின்னையா நியமிக்கப்பட்டதால் குழப்பம் – தேசிய சுதந்திர முன்னணி!
வைஸ் அட்மிரல் சின்னையாவை கடற்படைத் தளபதியாக நிர்வகித்த தால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்ப ட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்ன ணியினர் குழப்பம். தேசிய சுதந்திர முன்னணி விடுத்துள்ள அறிக்கை யில் “வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவின் இனத்துவ அடை யாளம் தொடர்பாக ஆட்சேபனை இல்லை. தமிழரோ, முஸ்லிமோ தகுதியானவராக இருந்தால் கடற்படைத் தளபதியாக நியமிக்கப்படலாம்.
ஆனால் வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா போர் முடிவடைந்த பின்னர் கடற்படையில் இருந்து ஓய்வு பெற்றதுடன், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தூதரக பாதுகாப்பு நிபுணராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அவருக்கு ஊதியம் வழங்கியுள்ளது.
வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா கடற்படையில் இருந்து சட்ட பூர்வமாக ஓய்வு பெற்றிருந்தாலும், அவரது ஓய்வு அரசியல் பழிவாங்கல் என்று கூறி தற்போதைய அரசாங்கம் அவரை மீண்டும் பணியில் சேர்த்து கிழக்கு பிராந்திய கடற்படைத் தளபதியாக நியமித்து்ளளது.
.
அமெரிக்கா திருகோணமலை துறைமுகத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கையாள்வதற்கு தொடர்ச்சியாக முயற்சித்து வருவதுடன் அமெரிக்காவுக்கு சார்பாக செயற்படக் கூடிய ஒருவரை கடற்படைத் தளபதியாக நிர்வகித்தது குறிப்பிடத்தக்கது. இது தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் இல்லையா? என்றும் தேசிய சுதந்திர முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.